முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் உளவுத்துறை கட்டிக்கொடுத்த பின்லேடனின் பங்க்ளா

புதன்கிழமை, 4 மே 2011      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், மே. 4 - சர்வதேச தீவிரவாதி பின்லேடன் தங்கி இருந்த பங்க்ளா பாகிஸ்தான் உளவுத் துறை கட்டிக் கொடுத்தது என்ற திடுக்கிடும் தகவல் விசார ணையில் தெரிய வந்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு - 

ஆப்கானிஸ்தானில் தங்கி இருந்த ஒசாமா பின்லேடன் 2001 -ம் ஆண்டு அமெரிக்க தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் எல்லைப் பகுதியை ஒட்டிய தோராபோரா மலைப் பகுதிக்கு ஓடி வந்து விட்டான். 

பின்னர் பாகிஸ்தானுக்குள் நுழைந்து விட்டான். கடந்த 2008 -ம் ஆண்டு முதல் அபோதாபாத் என்ற நகரில் வசித்து வந்துள்ளான். இது தலைநகர்  இஸ்லாமாபாத்திக்கு வடக்கே 80 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 

இங்கு அவன் தங்குவதற்காக ரூ. 10 கோடி செலவில், புதிய வீடு கட்டி

கொடுக்கப்பட்டுள்ளது. இது பாகிஸ்தானின் வடக்கு மண்டல ராணு

வ பயிற்சி முகாம் அமைந்துள்ள இடத்தில் இருந்து 800 மீட்டர் தொ

லைவில் தான் உள்ளது. 

இந்த வீடு 3 அடுக்குகளைக் கொண்டது. சுற்றிலும் 13 முதல் 16 அடி உயரத்திற்கு, காம்பவுண்டு சுவர் எழுப்பப்பட்டுள்ளன. அதற்கு மே

லே முள்கம்பி வேலியும் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த வீட்டிற்கு முக்கிய சாலைகளை நோக்கி ஜன்னல்கள் கிடையாது. மற்ற பகுதிகளை நோக்கி தான் உண்டு. தொலை பேசி வசதியும் இல்

லை. இன்டர்னெட் இணைப்பும் கிடையாது. 

இந்த வீட்டிற்கு மிகப் பெரிய அளவில் பாதுகாப்பு எதுவும் செய்யப்ப

டவில்லை. அதிகளவு பாதுகாப்பு வீரர்களை நிறுத்தி இருந்தால் மற்ற

வர்களின் கவனத்தை இது ஈர்த்து விடும் என்றும், இதன் மூலம் வெளி

யுலகிற்கு முக்கிய நபர் ஒருவர் தங்கி இருப்பது தெரிந்து விடும் என்று கருதியே இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. 

அதனால் தான் 6 வருடமாக எந்தவித சந்தேகமும் இன்றி, பின்லேட

னால் அங்கு தங்கி இருக்க முடிந்துள்ளது. ஆனால் அமெரிக்க உளவுத் துறையினரின் கழுகுப் பார்வையில், பின்லேடனுக்கு தகவல்களை கொண்டு செல்லும் கூரியர் நபர் ஒருவர் விழுந்துவிட்டார். 

அவரை பின் தொடர்ந்து கண்காணித்தார்கள். சாதாராண கூரியர் நப

ராக இருப்பவர் இவ்வளவு பெரிய வீட்டில் வசிக்க முடியுமா? என்ற சந்தேகம் அவர்களுக்கு ஏற்பட்டது. 

ஏனென்றால் அப்பகுதியில் உள்ள மற்ற வீடுகளைக் காட்டிலும், சுமா

ர் 8 மடங்கு பெரியதாக இருந்தது. இதையடுத்து, அந்த வீட்டை நோட்டமிட்டனர். மேலும், அந்த வீட்டின் ஜன்னல் அமைப்பகளையும், கண்காணித்தனர். 

இதன் மூலம், ஏதோ ஒரு முக்கிய தீவிரவாதி அங்கு இருப்பதை உணர்ந்தனர். அது பின்லேடன் தான் என்பதை உறுதி செய்து கொண்டனர். இதையடுத்தே தாக்குதல் நடத்தப்பட்டது. 

உலகத் தீவிரவாதத்தின் ஊற்றுக்கண் பாகிஸ்தான் என்பது எல்லோரு

க்கும் தெரியும். இருந்தாலும், இதை பாகிஸ்தான் மறுத்து வந்தது. இப்

போது, அந்நாட்டின் ராணுவ முகாமுக்கு அருகிலேயே பின்லேடன் தங்கி இருந்துள்ளதால் இது அந்நாட்டு ராணுவத்திற்கு தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை என்று கருதப்படுகிறது. 

இந்த வீட்டை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தான் ரூ. 10 கோடி செலவில் கட்டிக் கொடுத்ததாக ரகசிய தகவல் கிடைத்

துள்ளது. ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் தங்கும் விருந்தினர் இல்ல

மாக இதை கட்டியுள்ளார்கள். பின்னர் பின்லேடனிடம் ஒப்படைத்து உள்ளார்கள். 

பாகிஸ்தானின் உளவுத் துறை தலைவராக முன்பு இருந்தவர் ஹமித் குல். இவருக்கு அல் கொய்தா, தலிபான், லஸ்கர் இ தொய்பா ஆகிய தீவிரவாத குழுக்களுடன் நெருங்கிய தொடர்பு உண்டு. 

2008 -ம் ஆண்டு மும்பையில் நடந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு இந்த ஹமித் குல் உதவி செய்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது குறிப் பிடத்தக்கது. 

ஆகவே இவர் தான் பின்லேடனுக்கு ரூ. 10 கோடி செலவிலான 

இந்த வீட்டை கட்டிக் கொடுக்க ஏற்பாடு செய்ததாக செய்தி வெளி

யாகி உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்