முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தானுடன் இன்று மோதல்

புதன்கிழமை, 4 மே 2011      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, மே.4 - சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 9வது லீக் ஆட்டத்தில் இன்று ராஜஸ்தான் ராயல்சுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி அதில் 5 வெற்றிகளை பெற்றுள்ளது. யுவராஜ்சிங் தலைமையிலான புனே வாரியர்ஸ் அணியுடன் மோதிய முதல் ஆட்டத்தில் 25 ரன்கள் எனவும், 2வது முறை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் 2 முறை வெற்றி கண்டுள்ளது. கொல்கத்தா அணியை 2 ரன்கள் வித்தியாசத்திலும், பெங்களூர் அணியை 21 ரன்கள் வித்தியாசத்திலும், டெக்கான் சார்ஜர்ஸ் அணியை 19 ரன்கள் வித்தியாசத்திலும் வென்று மொத்தம் 5 வெற்றிகளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெற்றுள்ளது.

பஞ்சாப், மும்பை மற்றும் கொச்சி ஆகிய அணிகளுடன் மோதிய ஆட்டங்களில் சென்னை அணி தோற்றுள்ளது.

இந்த நிலையில் சென்னை அணிக்கான 9வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கத்திலுள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று (4ம் தேதி) நடக்கிறது. மாலை 4 மணிக்கு இந்த ஆட்டம் துவங்குகிறது. 

சென்னை அணி 6வது வெற்றியை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. முன்னதாக சேப்பாக்கத்தில் விளையாடிய 4 ஆட்டங்களில் வென்றுள்ள இந்த அணி அதிக நம்பிக்கையுடன் இருக்கிறது. சென்னை அணியில் மைக் ஹஸ்சி, சுரேஷ் ரெய்னா, பத்ரிநாத், அல்பி மார்கல், போலிஞ்சர், அஸ்வின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சென்னை அணிக்கு எல்லாவகையிலும் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சவாலாக இருக்கும். இந்த அணியில் வார்னேவுடன் டெய்லர், வாட்சன், டய்ட போன்ற சிறந்த வீரர்களும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  அந்த அணி இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடி அதில் 5 வெற்றிகளை கைப்பற்றி 11 புள்ளிகளை பெற்றுள்ளது. 

ராஜஸ்தான் அணி முன்னதாக தான் மோதிய புனே, மும்பை, கொச்சி ஆகிய அணிகளை தோற்கடித்து தொடர்ந்து 3 வெற்றிகளை கைப்பற்றி சென்னையில் இன்று நடக்கும் ஆட்டத்தில் சென்னை அணியையும் வென்று 4வது தொடர் வெற்றியை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்