முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூதாட்டத்தை தடுக்க இம்ரான் கான் வலியுறுத்தல்

புதன்கிழமை, 4 மே 2011      விளையாட்டு
Image Unavailable

 

கராச்சி,மே.4  - கிரிக்கெட்டில் சூதாட்டத்தை தடுக்க ஐசிசி மேலும் பல புதிய வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான்கான் கூறியுள்ளார்.1992 ம் ஆண்டு முதலே இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக முன்னாள் வீரர் ஹசன் திலகரத்னே கடந்த சில நாட்களுக்கு முன் குற்றம் சாட்டினார். இது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரஷித் லத்திப்பும் இதே போன்ற கருத்தை கூறினார். இந்நிலையில் கிரிக்கெட்டில் சூதாட்டம் நடைபெறுகிறது என்பதை என்னால் உறுதியாக கூற முடியாது. ஆனால் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை முழுமையாக கட்டுப்படுத்தவும் முடியாது. இது போன்ற நிகழ்வுகளை தடுக்க புதிய நடைமுறைகள் தேவை. எனவே ஐசிசி இந்த விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்தி புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

கிரிக்கெட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்ட வீரர்களுக்கு எதிராக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று இம்ரான்கான் கூறியுள்ளார். 

இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பித்த பிறகு பல சிறந்த வீரர்களை அடையாளம் காண முடிந்துள்ளது. இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது. ஆனால் பாகிஸ்தானை பொறுத்தவரை கிரிக்கெட்டில் பெரும் புரட்சியை ஏற்படுத்த வேண்டியதுள்ளது. தங்களுக்கு வேண்டியவர்களை தேர்வு செய்வது, பரிந்துரைகள் ஏற்கப்படுவது போன்றவை பாகிஸ்தான் கிரிக்கெட்டில் கீழ் மட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரையுள்ளது. நிர்வாகத்தை சீர்படுத்துவது, திறமையான வீரர்களை மட்டும் தேர்வு செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால் பாகிஸ்தான் அணி உலகின் தலை சிறந்த அணியாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்றார் இம்ரான் கான்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்