முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சினிமா நூற்றாண்டு விழா: ஜனாதிபதிக்கு அழைப்பு

வியாழக்கிழமை, 27 ஜூன் 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜூன்.28 - இந்தியாவில் சினிமா அறிமுகம் ஆகி 100 ஆண்டுகள் ஆவதையொட்டி இந்திய சினிமா நூற்றாண்டு விழா சென்னையில் கொண்டாடப்படுகிறது. வருகிற செப்டம்பர் மாதம் இவ்விழாவை பிரமாண்டமாக கொண்டாட தென்னிந்திய சினிமா வர்த்தக சபை முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளது. இந்த விழாவையொட்டி தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் சினிமா தோன்றிய காலத்தை நினைவு கூறும் வகையில் பழம்பெரும் சினிமா பிரபலங்களின் வாழ்க்கை, அவர்கள் நடித்த, உருவாக்கிய சினிமா காவியங்கள் பற்றிய நிகழ்ச்சி தொகுப்பு இடம் பெறுகிறது.

தமிழக சினிமாவில் எம்.கே.ராதரி, தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா, டி.ஆர்.மகாலிங்கம் போன்ற ஜாம்பவான்களுக்கு பின்னர் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் தமிழ் சினிமாவில் 60 ஆண்டுகள் கொடிகட்டி பறந்தார்கள்.

எம்.ஜி.ஆர். 1936-ம் ஆண்டு சதி லீலாவதி படத்தில் இன்ஸ்பெக்டர் ரங்கையா நாயுடுவாக அறிமுகமானார். ஏ.கிருஷ்ணசாமி பாவலர் எழுதிய ாபதிபக்திா மேடை நாடகத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் சதிலீலாவதி திரைக்கதையை எஸ்.எஸ்.வாசன் எழுத எல்லிஸ் ஆர்.டங்கன் இயக்கினார். இந்தப் படத்தில் கதாநாயகன் எம்.கே.ராதா, கதாநாயகி டி.எஸ்.ஞானம்மாள். எம்.ஜி.ஆருடன் என்.எஸ்.கிருஷ்ணன், டி.எஸ். பாலையா ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்தப்படத்தில் நடித்த போது எம்.ஜி.ஆருக்கு வயது 19. தொடர்ந்து திரைப்படங்களில் கொடி கட்டி பறந்து புரட்சி நடிகராக, மக்கள் திலகமாக தமிழ் ரசிகர்கள் நெஞ்சங்களில் இடம் பிடித்தார். அரசியலில் புரட்சி தலைவராக வலம் வந்து ஆட்சியைப் பிடித்து முதல்-அமைச்சரானார். உலகிலேயே முதல்-அமைச்சரான நடிகர் எம்.ஜி.ஆர்.தான்.

இதே போல் நடிப்புலக சக்கரவர்த்தியாக நடிப்புக்கு இலக்கணமாக நடிப்பு பல்கலைக்கழகமாக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் சிவாஜி கணேசன். இவர் 1952-ல் பராசக்தி படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே கதாநாயகனாக நடித்தார். இதில் குணசேகரன் என்ற இளைஞனாக புரட்சிகர வசனம் பேசி நடித்து இருந்தார்.

மு.கருணாநிதி எழுதிய கதையை கிருஷ்ணன்-பஞ்சு இயக்கினார். சிவாஜியுடன் இந்தப் படத்தில் எஸ்.வி. சகஸ்ரநாமம், எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஸ்ரீரஞ்சனி, பண்டரிபாய் ஆகியோரும் நடித்து இருந்தனர். சென்னையில் நடைபெறும் சினிமா நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, கவர்னர் ரோசையா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியையும் விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்ததும் இவ்விழா நடைபெறும் தேதி முடிவு செய்யப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago