முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளவரசர் வில்லியம் தம்பதி செசல்ஸ் தீவில் தேனிலவு

புதன்கிழமை, 4 மே 2011      உலகம்
Image Unavailable

லண்டன்,மே.4 - இங்கிலாந்து இளவரசர் வில்லியம், கேத்மிடில்டன் திருமணம் கடந்த 29 ம் தேதி நடைபெற்றது. தற்போது இவர்களது தேனிலவு கொண்டாட்டம் செசல்ஸ் தீவில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய பெருங்கடலில் உள்ள செசல்ஸ் தீவு இயற்கை சூழல் மிகுந்த அழகிய கடற்கரையில் அமைந்த இடம். இளவரசி கேத் மிடில்டன் இங்கு இதுவரை வந்ததில்லை. எனவேதான் இந்த இடத்தை தேனிலவுக்கு தேந்தெடுத்ததாக தெரிகிறது. இளவரசர் வில்லியம் தம்பதி தங்குவதற்காக ஆடம்பர பங்களா ஒன்று வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு நாள் வாடகை ரூ. 3 லட்சமாகும். திருமணம் முடிந்ததும் இளவரசர் வில்லியம் விமான படை வேலைக்காக ஏஞ்சல்ஸ் சென்றிருந்தார். தேனிலவுக்கான ஏற்பாட்டை தொடர்ந்து அவர் இன்று லண்டன் திரும்ப உள்ளார். பின்னர் அவர் இளவரசி கேத்மிடில்டனுடன் வரும் 15 ம் தேதிக்கு பிறகு செசல்ஸ் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்