முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.எல்.ஏக்கள் 7 பேரை சஸ்பெண்ட் செய்தார் விஜயகாந்த்

சனிக்கிழமை, 29 ஜூன் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை.ஜூன்.30 - தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 7 பேரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி கட்சித்தலைவர் விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார். அண்மையில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில், கொறடா உத்தரவை மீறி அவர்கள் வாக்களித்தது தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. தே.மு.தி.க.வில் இருந்த 29 எம்.எல்.ஏ.க்களில் மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ. சுந்தர்ராஜன், பேராவூரணி எம்.எல்.ஏ. அருண்பாண்டியன், திட்டக்குடி எம்.எல்.ஏ. தமிழழகன், ராதாபுரம் எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன், செங்கம் தொகுதி எம்.எல்.ஏ. சுரேஷ்குமார் ஆகிய 5 பேர் கடந்த 5 மாதத்திற்கு முன்பு கோட்டைக்கு சென்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தனர். இவர்களைத் தொடர்ந்து சேர்ந்தமங்கலம் தொகுதி பெண் எம்.எல்.ஏ. சாந்தி ராஜமாணிக்கம், விருதுநகர் தொகுதியின் தேமுதிக எம்.எல்.ஏ மாடிபா பாண்டியராஜன் ஆகியோர் முதல்வரை சந்தித்து மனு கொடுத்தனர். தொகுதி வளர்ச்சி தொடர்பாகவே முதல்வரைச் சந்தித்து பேசியதாக அவர்கள் தெரிவித்தனர். சட்டசபைலும் தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்களை அவர்கள் வாபார புகழ்ந்தனர். தமிழகத்தை முன்னேடி மாநிலமாக்க முதல்வர் ஜெயலலிதா எடுத்து வரும் நடவடிக்கையும் அவர்கள் பாராட்டினர்.

அப்போது முதலே இவர்கள் அதிமுகவின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களாகவே கருதப்பட்டனர். இருப்பினும் அவர்களை கட்சியை விட்டு நீக்காமலேயே வைத்திருந்தார் விஜயகாந்த். மாநிலங்களவை தேர்தலில் தேமுதிகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று கட்சி எம்.எல்.ஏக்கள் அனைவருக்கும் அக்கட்சித்தலைவர் விஜயகாந்த் கடிதம் எழுதினார். அதனை மதிக்காமல் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 7 பேரும் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்தனர். 

இதனையடுத்து கட்சி உத்தரவை மீறிய குற்றத்திற்காக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 7 பேரை சஸ்பெண்ட் செய்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார். அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்