முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

59 ஆண்டுகளுக்குப் பிறகு உச்சநீதிமன்ற நீதிபதியாகும் தமிழர்

சனிக்கிழமை, 29 ஜூன் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை.ஜூன்.30 - 59 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தை சேர்ந்த ஒருவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார். நீதிபதி சதாசிவத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஜூலை 19ஆம் தேதி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த சதாசிவம் நியமிக்கப்பட்டுள்ளார்.தற்போது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள அல்டமாஸ் கபீரின் பதவிக் காலம் ஜூலை 19ம் தேதியுடன் முடிவடைவதையொட்டி, அடுத்த புதிய தலைமை நீதிபதியாக சதாசிவத்தை நியமித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உத்தரவிட்டுள்ளார். 

இதற்கான அரசு அணை வெள்ளிக்கிழமை மாலை வெளியானது.

இதையடுத்து, தமிழகத்தைச் சேர்ந்த சதாசிவம், வரும் ஜூலை 19ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளார்.

சுமார் 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உச்ச நீதிமன்றத்தில் இதற்கு முன்னர் 1951 - 1954 காலகட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த எம்.பதஞ்சலி சாஸ்திரி தலைமை நீதிபதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உச்ச நீதிமன்றத்தின் 40வது தலைமை நீதிபதியாக தமிழகத்தை சேர்ந்த சதாசிவம் நியமிக்கப்பட்டுள்ளார். 

ஈரோடு மாவட்டம் பவானி தாலுகா, கடப்பனல்லூர் கிராமத்தில் விவசாயக்குடும்பத்தில் 1949 ஏப்ரல் 27ல் பிறந்தவர் சதாசிவம். 1973ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியை தொடங்கினார்.

1996ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றார். 2007ம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். தற்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக அவர் பொறுப்பேற்றக உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்