முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுவை - குமரி, மும்பை - காரைக்கால் புதிய ரெயில்கள்

சனிக்கிழமை, 29 ஜூன் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்30 - புதுச்சேரியில் இருந்து கன்னியாகுமரிக்கும், மும்பையில் இருந்து காரைக்காலுக்கும் விரைவு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. புதிய ரெயில்கள் சேவை குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

மும்பையில் இருந்து காரைக்காலுக்கு சனிக்கிழமை தோறும் விரைவு ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் சென்னை, விழுப்புரம் வழியாக காரைக்கால் சென்றடையும். இதேபோல் புதுச்சேரியில் இருந்து கன்னியாகுமரிக்கு வியாழன் தோறும் விரைவு ரெயில் இயக்கப்படும்.இந்த ரெயில் விழுப்புரம், கும்பகோணம், சிவகங்கை வழியாகச் செல்லும். திருப்பதியில் இருந்து விழுப்புரம், திருவண்ணமலை வழியாக புதுச்சேரிக்கு சனிக்கிழமை தோறும் விரைவு ரயில் இயக்கப்படும்.பழனி-திருச்செந்தூர் இடையே தினசரி பயணிகள் ரெயில் இயக்கப்பட உள்ளது. எழும்பூர்- தஞ்சாவூர் புதிய ரெயில் விரைவில் இயக்கப்படும். செவ்வாய்க்கிழமை தோறும் கோவையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு விரைவு ரயில் சேவை தொடங்கப்படும்.

இந்த ரெயில் திருச்சி, புதுக்கோட்டை வழியாக செல்லும். பெங்களூரில் இருந்து கரூர், மதுரை வழியாக நாகர்கோவிலுக்கு தினசரி விரைவு ரெயில் இயக்கப்படும். இந்த புதிய ரெயில்களின் சேவை தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

மேலும், சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

இந்த ரெயில் எழும்பூரில் இருந்து தினமும் இரவு 8.05க்கு பதில் 8.10க்கு புறப்படும். 

மதியம் 1.50 மணிக்கு இயக்கப்பட்ட சென்னை சென்டிரல்-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் இனி பிற்பகல் 2.10 இயக்கப்பட உள்ளது. 

பிற்பகல் 2.10 மணிக்கு இயக்கப்பட்ட சென்னை சென்டிரல்-வாஸ்கோடகாமா எக்ஸ்பிரஸ் ரயில் மதியம் 1.50 மணிக்கு இயக்கப்படுகிறது.

 பிற்பகல் 2.10 மணிக்கு இயக்கப்பட்ட சென்னை சென்டிரல்- ஹூப்ளி எக்ஸ்பிரஸ் ரயில் மதியம் 1.50 மணிக்கு இயக்கப்பட உள்ளது. 

மாலை 4.15 மணிக்கு இயக்கப்பட்ட சென்னை சென்டிரல்- பூரி எக்ஸ்பிரஸ் ரயில் இனி மாலை 4.20 இயக்கப்படுகிறது. 

மாலை 4.15 மணிக்கு இயக்கப்பட்ட சென்னை சென்டிரல்- ஷாலிமர் எக்ஸ்பிரஸ் ரயில் மாலை 4.20 மணிக்கு இயக்கப்படுகிறது. 

மாலை 4.15 மணிக்கு இயக்கப்பட்ட பெங்களூர் சிட்டி-தர்பங்கா பக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் மாலை 4.20 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

சென்னை எழும்புர்ை சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.05 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூர் - செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு செல்லும். 

ரயிகளின் வருகை 

சென்னை எழும்புர்ை ரயில் நிலையத்துக்கு அதிகாலை 4.50 மணிக்கு வந்து சேரும் சேலம்-சென்னை எழும்புர்ை எக்ஸ்பிரஸ் ரயில் அதிகாலை 4.40 மணிக்கு வந்து சேரும் 

அதிகாலை 3.10 மணிக்கு வரும் தன்பாத்-ஆலப்புழை எக்ஸ்பிரஸ் ரயில் அதிகாலை 2.55 மணிக்கு வந்து சேரும். 

காலை 9.05 மணிக்கு வரும் ஜோலார்பேட்டை- சென்னை சென்டிரல் எக்ஸ்பிரஸ் ரயில் காலை 9.15 மணிக்கு வந்தடைகிறது. 

காலை 10.30 மணிக்கு மணிக்கு வரும் திருப்பதி-சென்னை சென்டிரல் எக்ஸ்பிரஸ் ரயில் காலை 11.30 மணிக்கும், மதியம் 1.15 மணிக்கு வரும் 

திருப்பதி-சென்னை சென்டிரல் எக்ஸ்பிரஸ் ரயில் மதியம் 1.40 மணிக்கும் வந்து சேரும். 

பிற்பகல் 3.50 மணிக்கு வரும் பெங்களுார் சிட்டி- தர்பங்கா பக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் பிற்பகல் 3.55 மணிக்கும், இரவு 8.35 மணிக்கு வரும் திருப்பதி- சென்னை சென்டிரல் எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 9.35 மணிக்கும் வந்து சேரும் .

மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் சென்னை எழும்புரிைல் இருந்து திருச்சி வரை செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்:12605டி12606) காரைக்குடி வரை செல்லும்

. தற்போது சென்னை எழும்புரிைல் இருந்து கும்பகோணம் வரை செல்லும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில்(16877டி16878) திருச்சியுடன் நிறுத்தப்படும் 

குருவாயுர்ை எக்ஸ்பிரஸ் சென்னை எழும்புரிைல் இருந்து குருவாயுர்ை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில்(16127டி16128) மதுரை வரை இணைக்கப்படும், என்றும் ஒரு பகுதி ரயில்(16129டி16130) தூத்துக்குடி வரை செல்லும் .

இதே போன்று மங்களூரில் இருந்து திருச்சி வரை செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்(12653டி12654) புதுச்சேரி வரை நீடிப்பு செய்யப்பட்டுள்ளது. 

ஏலகிரி எக்ஸ்பிரஸ் இந்த தூரம் நீட்டிப்பு மற்றும் குறைப்பு சேவை குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் .

சென்னை சென்டிரலில் இருந்து திருப்பத்தூர் வரை செல்லும் ஏலகிரி எக்ஸ்பிரஸ்(16089டி16090) வருகிற 1ஆம் தேதி முதல் ஜோலார்ப்பேட்டை வரை செல்லும் .

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்