முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டில் 831 பாதுகாக்கப்படாத நினைவுச் சின்னங்கள்

புதன்கிழமை, 4 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.4 - தமிழ்நாட்டில் மொத்தம் 831 பாதுகாக்கப்படாத நினைவுச் சின்னங்கள் இருக்கின்றன. அந்த வகையில் நாடு முழுவதும் மொத்தம் 33.826 பாதுகாக்கப்படாத நினைவுச் சின்னங்கள் உள்ளன என தொல்பொருள் அமைப்பு தெரிவித்துள்ளது. நாட்டில் உள்ள பாதுகாக்கப்படாத நினைவுச் சின்னங்கள் குறித்து தகவல் தளம் ஒன்றை தயாரிக்கவும், அவற்றை ஆவணப்படுத்தவும், தேசிய நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அது நாட்டில் உள்ள பாதுகாக்கப்படாத நினைவுச் சின்னங்கள் பற்றிய விவரங்களை தொகுத்துள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் 831 பாதுகாக்கப்படாத நினைவுச் சின்னங்களும், ஆந்திராவில் 413 பாதுகாக்கப்படாத நினைவுச் சின்னங்களும் கேரளாவில் 1816 பாதுகாக்கப்படாத நினைவுச் சின்னங்களும், புதுச்சேரியில் 1,800 பாதுகாக்கப்படாத நினைவுச் சின்னங்களும், கர்நாடகாவில் 445 பாதுகாக்கப்படாத நினைவுச் சின்னங்களும் உள்ளன.

மிக அதிகபட்சமாக ராஜஸ்தானில் 5,220 பாதுகாக்கப்படாத நினைவுச் சின்னங்கள் உள்ளன. அதற்கு அடுத்தப்படியாக உத்தரப்பிரதேசத்தில் 3,635 பாதுகாக்கப்படாத நினைவுச் சின்னங்களும், மேற்கு வங்கத்தில் 3,627 பாதுகாக்கப்படாத நினைவுச் சின்னங்களும்,  ஒரிசாவில் 3,248 பாதுகாக்கப்படாத நினைவுச் சின்னங்களும் உள்ளன. மிகக்குறைந்தபட்சமாக மணிப்பூரில் 22 பாதுகாக்கப்படாத நினைவுச் சின்னங்கள் உள்ளன என்று தொல்பொருள் அமைப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்