முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு நிதிஉதவி

ஞாயிற்றுக்கிழமை, 30 ஜூன் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை1 - மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் முதலமைச்சர் ஜெயலலிதா நிதிஉதவி வழங்கியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கிருஷ்ணகிரி  மாவட்டம்,  தேன்கனிக்கோட்டை வட்டம், பீமசந்திரம் கிராமத்தைச் சேர்ந்த சென்னவீரா ரெட்டி, அவரது மனைவி அருணா மகன் சிறுவன் தனுஷ் மற்றும் மகள் சிறுமி திவ்யா ஆகியோர் மீது  15.6.2013 அன்று தேவகானப்பள்ளி என்ற இடம் அருகே உயரழுத்த மின்சார வயர் அறுந்து விழுந்ததன் காரணமாக, மின்சாரம் தாக்கி நால்வரும் சம்பவ  இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியையும்,

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், அங்குசெட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் சிறுவன் விக்டர் 16.6.2013 அன்று  பால் வாங்க சென்ற போது அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான் என்ற செய்தியையும் அறிந்து  நான் மிக்க துயரம் அடைந்தேன். 

மின்சாரம் தாக்கியதில்  அகால மரணமடைந்த சென்னவீரா ரெட்டி, அருணா, சிறுவன் தனுஷ், சிறுமி திவ்யா மற்றும் சிறுவன் விக்டர் ஆகியோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துயரச் சம்பவங்களில்  உயிரிழந்த சென்னவீரா ரெட்டி,  அருணா, சிறுவன் தனுஷ், சிறுமி  திவ்யா  மற்றும்  சிறுவன் விக்டர் ஆகியோரின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய்  வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்