முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அப்சல் குருவை கொல்லாதது ஏன்? பா.ஜ.க. சூடான கேள்வி

புதன்கிழமை, 4 மே 2011      இந்தியா
Image Unavailable

 

ஜெய்ப்பூர்,மே.4 - பின்லேடனை அமெரிக்கா கொன்றதை போல அப்சல் குருவை இந்தியா தூக்கில் போடாதது ஏன்? என்று பா.ஜ.க. தலைவர் கட்காரி மத்திய அரசுக்கு கேள்விக்கணை தொடுத்துள்ளார். புது டெல்லியில் சில வருடங்களுக்கு முன் பாராளுமன்றத்துக்குள் நுழைந்து துப்பாக்கியால் சுட்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் முக்கிய குற்றவாளியான அப்சல் குருவுக்கு கோர்ட் தூக்கு  தண்டனை விதித்தது. தீர்ப்பு வெளியாகி பல ஆண்டுகளாகியும் அப்சல் குருவுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படாமல் உள்ளது. தற்போது நியூயார்க் தாக்குதலில் ஈடுபட்ட பின்லேடனை அமெரிக்கா கொன்று விட்ட நிலையில் அப்சல் குருவை தூக்கிலிட இந்தியா தயங்குவது ஏன் என்று பாரதீய ஜனதா தலைவர் நிதின் கட்காரி கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து ஜெய்ப்பூரில் நடந்த பா.ஜ.க. கூட்டத்தில் நிதின் கட்காரி பேசியதாவது, 

அமெரிக்காவின் நியுயார்க் நகரில் இரட்டை கோபுரங்கள் தாக்கப்பட்டதை 10 ஆண்டுகளாகியும் அமெரிக்கா மறக்கவில்லை. அதற்கு முக்கிய காரணமாக விளங்கிய பின்லேடனை அமெரிக்கா தேடிப் பிடித்து கொன்று விட்டது. ஆனால் இந்தியாவில் நடப்பது என்ன? நமது பாராளுமன்ற கட்டிடத்தை தாக்கிய தீவிரவாதி அப்சல் குருவுக்கு கோர்ட் தூக்கு தண்டனை விதித்த பின்பும் கூட இந்திய அரசு தண்டனையை நிறைவேற்றாமல் இருப்பது ஏன்? பிரணாப் முகர்ஜி, சிதம்பரம் போன்றவர்கள் பிரதமராக வர கனவு காண்கிறார்கள். ஆனால் அவர்களால் காங்கிரசுக்கு தலைவராக கூட வர முடியவில்லை. நாட்டில் ஊழல் மலிந்திருந்தாலும் விலைவாசி உயர்ந்திருந்தாலும் தீவிரவாதம் தலைதூக்கியிருந்தாலும் அரசு அதனை சமாளிக்காமல் மெத்தனமாக இருக்கிறது. பாரதீய ஜனதா ஒரு ஜனநாயக கட்சி. அது தொழிலாளர்களுக்கு வாய்ப்பும், வசதியும் வழங்க தயாராக இருக்கிறது என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்