முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரயில்வே கூட்டுறவு ஊழியர் சங்கத்தில் முறைகேடுகள்

ஞாயிற்றுக்கிழமை, 30 ஜூன் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.1 - ரயில்வே கூட்டுறவு சங்கத்தின் முறைகேடுகள் நடப்பதாகவும் அதன் தலைவர் கண்ணையா கடந்த சட்டமன்ற- நாடாளுமன்ற தேர்தல்களில் தி.மு.க. ஆதரவாக சொசைட்டி ஊழியர்களை வேலை செய்ய வைத்தார் என குற்றம் சாட்டியுள்ள ரயில் எம்.பிளாயிஸ் கோ ஆப்ரேட்டிங் சொசைட்டி ஸ்டாப் யூனியன் குற்றம்சாட்டி உள்ளதுடன், இது குறித்து முதல்வர் ஜெயலலிதா தலையிட கோரி உண்ணாவிரதம் இருந்தனர்.

இது குறித்து விபரம் வருமாறு:-

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நேற்று முன்தினம் ரயில்வே கூட்டுறவு ஊழியர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். இந்த உண்ணாவிரதத்தின் பொது செயலாளர் சிலை தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்த உண்ணாவிரதத்தை தலைவர் ஆனந்த் துவக்கி வைத்து பேசுகையில் ரயில்வே கூட்டுறவு நாணய சங்கத்தை காப்பாற்ற வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அவர் பேசிய விபரம் வருமாறு:-

1907, ஜனவரி மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட இரயில்வே கூட்டுறவு நாணய சங்கமானது 105 ஆண்டுகள் கடந்து சரித்திரம் படைத்துள்ல ஒரு சங்கமாகும். இது மத்திய கூட்டுறவு சங்க விதிகளின் படி பதிவு செய்யப்பட்டது. 1984 வரை இரயில்வேயின் முழு கட்டுப்பாட்டில் இருந்த சங்கத்தை சிறிது சிறிதாக ஆநீடீ கஹசூ அனைத்தையும் மாற்றி தனது முழு கட்டுப்பாட்டில் என்.கண்ணைய்யா கொண்டு வந்துள்ளார். 1907 முதல் சங்கத்தின் சேர்மனாக தொடர்ந்து இன்று வரை இருக்கின்றார். கடந்த 20 வருடங்களாக ஜனநாயக முறையில் தேர்தலை நடத்தாமல் போலி ஆவணங்கள் மூலம் தேர்தல் நடத்தி இவரே தனது முழு கட்டுப்பாட்டில் வைத்து இருக்கின்றார். ஊழியர்களிடம் இரயில்வே வேலைக்கு வைப்புத் தொகை என்று கூறி 5 முதல் 7 லட்சம் வரை பணத்தை வாங்கிக் கொண்டு வேலைக்கு வைத்து வருகின்றார். இவ்வாறு பணத்தை பெற்றுக் கொண்டு 1200 தொழிலாளர்கள் வரை அப்பாயிண்ட்மெண்ட் செய்து உள்ளார்கள். அவர்களின் 800 பேர் வரை வேலை நியமன உத்தரவு எதுவும் கிடையாது.

கடந்த 20 வருடங்களாக ஊழியர்களுக்கு சர்வீஸ் ரூல்ஸ், ஸ்டாண்டிங், ஆர்டர் (மாநில அரசின் தொழிலாளர் நலச்சட்டம்) ஏதும் கிடையாது. எதிர்த்து கேட்கும் ஊழியர்களை அலுவலகத்திலேயே அடிப்பது, (பஙுஹடூஙூக்டீஙு) பணியிடமாற்றம் செய்வது, வேலையை விட்டே டிஸ்மிஸ் செய்வது (சுமார் 150 ஊழியர்களை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்தது) என ஊழியர்களை மிரட்டி கொத்தடிமையாக வைத்து உள்ளார்.

இவருடைய அரசியல் லாபத்திற்காக கடந்த சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.விற்கு ஆதரவாக சுமார் 500 தொழிலாளர்கள் வரை வலுகட்டாயமாக மிரட்டி கடுமையான வெயிலின் தேர்தல் வேலையில் ஈடுபடுத்தினார்கள். மறுத்த தொழிலாளர்களை பணியிடம் மாற்றம் செய்து விடுவேன் என மிரட்டப்பட்டனர். மேலும் இரவு பகல் பாராமல், என விமான நிலையத்திற்கு வந்து செல்லும் அரசியல் தலைவர்கள் வரவேற்க தொழிலாளர்கள் வலுகட்டாயமாக பயன்படுத்தப்பட்டார்கள்.

பணியிடமாற்றம் போடாமல் இருக்கு 30,000 ஆயிரம் லஞ்சம், ஆஙுஹடூஷகீ-ல் இருந்து சென்னைக்கு வர ரூ.40,000 முதல் 50,000 வரை லஞ்சம் ஞக்க்டுஷடீ அஙூஙூடுஙூசிஹடூசி-ல் இருந்து இங்டீஙுகூ-ஆக டஙுச்ஙிச்சிடுச்டூ பெற 3 லட்சம் லஞ்சம், வேலைக்கே வராமல் வீட்டில் இருந்தபடியே சம்பளம் வாங்க மாதம்,  மாதம் லஞ்சம், பேங்க் லோன் வாங்க 5 கமிஷன், வீடு கட்ட லன் வாங்க லஞ்சம் என தொழிலாளர்களை பாடாய்படுத்தி வருகின்றார்கள். இவரை எதிர்த்து கேள்விகேட்ட சுமார் 150 தொழிலாளர்களை வலுகட்டாயமாக மிரட்டி வி.ஆர்.எஸ்.-ல் விட்டிற்கு  அனுப்பிவிட்டார்கள். மத்திய/ மாநில அரசின் பிற்படுத்தப்படோருக்கான இட ஒதுக்கீடு முறை பின் பற்றப்படவில்லை.

6-வது சம்பள கமிஷன் அரியர்ஸ் பணம் பட்டுவாடா செய்யப்பட்ட பொழுது முழு பணம் தராமல் கையை வைத்து மறைத்து கையெழுத்து வாங்கி ஏமாற்றப்பட்டனர். இவ்வாறு தொழிலாளர்களிடம்  கொள்ளையடித்த பணம் சுமார் 80 லட்சம் ரூபாய்.

பி.யூ.சி. மட்டுமே படித்த என்.மணிவண்ன் என்பவரை செயலாளராக நியமனம் செய்தது, பாலியல் தொந்தரவு செய்து, நில மோசடி மற்றும் செக் மோசடியில் ஈடுபட்டுள்ள ஜெ.நாகசேகரி என்பவரை நஙு.அக்ஷஙிடுடூடுஙூசிஙுஹசிடுசுடீ ஞக்க்டுஷடீஙு-ஆக நியமனம் செய்தது என இவருக்கு சாதகமாக இருப்பவர்களிடம் எந்த விதிமுறைகளை பின்பற்றாமல் நியமனம் செய்து உள்ளார்கள்.

தொழிலாளர்களின் நலனை பற்றி எந்த கவலையும் இல்லாமல் தொழிற்சங்கம் நடத்தி வரும் எஸ்.பரமசிவம் என்பவரை கையில் போட்டுக் கொண்டு தனது இஷ்டப்படி நடத்தி வருகிறார்கள்.

இவற்றை எல்லாம் எதிர்த்து 1000 தொழிலாளர்களின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்டதே இரயில்வே எம்ப்ளாயிஸ் கோ-ஆப்ரேட்டிவ் சொஸைட்டி ஸ்டாப் யூனியன் ஆகும். சங்கம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து தொழிலாளர்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றோம்.செயலாளர் என்.மணிவண்ணன் எங்கள் சங்க ஒற்றுமையை சீர்குலைக்க தொழிலாளர்களுக்கு (மடூக்ஹஙு கஹஸச்சீஙு டஙுஹஷசிடுஷடீ) எதிரான பல நடவடிக்கைகளை சட்டத்திற்கு புறம்பாக எடுத்து வருகிறார். எடுத்துக்காட்டாக புதிய தொழிற்சங்கத்தை சார்ந்தவர்களுக்கு லீவு தர மறுப்பது, கச்ஙூஙூ ச்க் ஙீஹநீ போடுவது, வேலை பளு அதிகமாக தருவது, சிறிய சிறிய தவறுகளுக்கு ஙடீஙிச் தருவது, 30 தொழிலாளர்களுக்கு இகீஹஙுகிடீ நகீடீடீசி கொடுக்கப்பட்டுள்ளது. புதிய சங்கத்தை சேர்ந்தவர்களை மட்டுமே பணியிட மாற்றம் செய்வது, ஊடுஙுஙூசி இங்ஹஙூஙூ பாஸ் தர மறுப்பது என பல இன்னல்களை அளித்து வருகின்றார்கள்.

இவற்றை எல்லாம் எதிர்த்து கடந்த 1 அறை வருடமாக போராடி வருகின்றோம். தமிழக முதல்வர் ஜெயலலிதா  தலையிட்டு எங்களையும், எங்கள் குடும்பத்தையும் காப்பாற்றும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

800 தொழிலாளர்களுக்கு பணிநியமனம் ஆணை வழங்க வேண்டும். ஊழியர்களுக்கு ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற ஏற்பாடு செய்யவேண்டும். 6-வது ஊதிய குழுவில் அரியர்ஸ் பணம் ரூபாய் 80 லட்சத்தை திருப்பி வழங்கவேண்டும் என உட்பட 18 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடைபெறுகிறது.இவ்வாறு ஆனந்த் கூறினார். இந்த உண்ணாவிரதத்தில் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்