முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாலை விபத்துக்களில் மரணமடைந்த குடும்பங்களுக்கு நிதிஉதவி

ஞாயிற்றுக்கிழமை, 30 ஜூன் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.1 - சாலை விபத்துக்களில் மரணமடைந்த 5 பேர் குடும்பங்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா தலா ரூ.1 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை, பல்லவன் சாலை அருகே 16.6.2013 அன்று இருசக்கர வாகனம் மீது மாநகர அரசுப் பேருந்து மோதியதில், இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த  சந்தீப் என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்,

சென்னை, நுங்கம்பாக்கம், வள்ளுவர்கோட்டம் அருகே 18.6.2013 அன்று இரு சக்கர வாகனம் மீது மாநகர அரசுப் பேருந்து மோதியதில், இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த விருகம்பாக்கத்தைச் சேர்ந்த தேவநாயக் சபாவக்த் என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்,

மதுரை மாநகர்,  கீழவாசல் சந்திப்பு அருகே 19.6.2013 அன்று வேன் மீது அரசுப் பேருந்து மோதியதில், வேனில் பயணம் செய்த திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூரைச் சேர்ந்த கோவிந்தராஜுலு என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்,

திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி வட்டம், திருச்சிராப்பள்ளி null சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் 19.6.2013 அன்று இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து  மோதியதில்,  இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த இலால்குடியைச் சேர்ந்த மாணிக்கவாசகம்  என்பவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 20.6.2013 அன்று உயிரிழந்தார் என்ற செய்தியையும், 

கன்னியாகுமரி மாவட்டம்,  தோவாளை வட்டம், இறச்ச குளம் சந்திப்பு அருகே 10.6.2013 அன்று இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில், இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்து  அகஸ்தீஸ்வரம் வட்டம், தெங்கம்புதூர் கிராமம், புத்தளம் பகுதியைச்  சேர்ந்த  சுப்பையா என்பவரின் மகன் லெட்சுமணன் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 14.6.2013 அன்று  உயிரிழந்தார் என்ற செய்தியையும்   அறிந்து நான்  மிகவும் துயரம் அடைந்தேன். 

இந்த சாலை விபத்துகளில் அகால மரணமடைந்த சந்தீப், தேவநாயக் சபாவக்த்,  கோவிந்தராஜுலு, மாணிக்கவாசகம் மற்றும் லெட்சுமணன்   ஆகியோரின் குடும்பங்களுக்கு  எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்த துயர சம்பவங்களில்  அகால மரணமடைந்த சந்தீப், தேவநாயக் சபாவக்த் கோவிந்தராஜுலு, மாணிக்கவாசகம் மற்றும்  லெட்சுமணன்   ஆகியோரின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா  ஒரு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். 

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்