முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கத்தரி வெயில் இன்று ஆரம்பம்

புதன்கிழமை, 4 மே 2011      இந்தியா
Image Unavailable

 

மதுரை,மே.4  - சுட்டெறிக்கும் கத்தரி வெயில் இன்று முதல் ஆரம்பமாகிறது. இந்த வெயில் வரும் 29 ம் தேதி வரை நீடிக்கும். தமிழகத்தில் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கோடை காலமாகும். அதுவும் ஏப்ரல் முதல் மே இறுதி வரை வெயிலின் தன்மை கடுமையாக இருக்கும். கடந்த வருடம் கோடை காலம் முடிந்த பிறகும் மீண்டும் கோடை வந்து விட்டதோ என்று எண்ணும் அளவிற்கு வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. கோடை மழை ஆங்காங்கே பெய்த போதிலும் சென்னையில் கடுமையான வெப்பம் நிலவியது. 

இந்நிலையில் அக்னி நட்சத்திரம் இன்று முதல் துவங்குகிறது. இந்த கத்தரி வெயில் 29 ம் தேதி வரை மொத்தம் 26 நாட்கள் நீடிக்கும். இந்த காலக்கட்டத்தில் பொதுமக்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். வெயிலில் அலைவதை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும். வெயில் அதிகமானால் உடலில் கொப்பளங்கள் ஏற்படும். மேலும் வியர்க்குரு, சின்னம்மை போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இவற்றில் இருந்து தப்பிக்க தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும் வெள்ளரி, தர்ப்பூசணி, இளநீர், நொங்கு, பதநீர் போன்றவற்றை சாப்பிட்டு உடல் சூட்டை தணிக்கலாம். கோடை காலத்திற்கு ஏற்ற பருத்தி ஆடைகளை அணியலாம். மேலும் ஆடைகளை இறுக்கமாக அணியாமல் தளர்வாக அணிவது நல்லது. வெயிலில் செல்லும் போது குடை பிடித்து செல்வது நல்லது. டூவீலரில் செல்லும் போது தொப்பி அணிந்து செல்லலாம். முடிந்த அளவு அசைவ உணவை தவிர்த்து விடுவது நல்லது. குறிப்பாக, வெயில் காலத்தில் சிக்கன் சாப்பிடுவது நல்லதல்ல. சாப்பாட்டில் காரத்தை குறைத்து கொள்ளலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony