முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்.க்கு மாற்று பா.ஜ.க மக்கள் ஏற்க மாட்டார்கள்: காரத்

ஞாயிற்றுக்கிழமை, 30 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

மதுரை, ஜூலை. 1 - இடதுசாரிகள் அமைக்கும் 3 வது அணிக்கு அரசியல் கட்சிகள் ஆதரவு தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் அழைப்பு விடுத்துள்ளார். 3 வது அணி என்பதை நேரடியாக குறிப்பிடாவிட்டாலும் பா.ஜ.க, காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் இணைப்பு வருங்காலத்தில் நாட்டை வழிநடத்தும் அரசியல் சக்தியாக உருவெடுக்கும் என்றும் அவர் கூறினார். 

மதுரை மேலமாசி வீதி, வடக்கு மாசி வீதி சந்திப்பில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியதாவது, 

காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு பெரும் முதலாளிகள் கொள்ளை லாபம் சம்பாதிக்கவே வழிவகுக்கிறது. இயற்கை எரிவாயு விலை இரு மடங்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. 3 வது முறையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயரும். நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ. 5 லட்சம் கோடியை வரி சலுகையாக பெரும் முதலாளிகளுக்கு மத்திய அரசு வழங்கியிருக்கிறது. பா.ஜ.க பின்பற்றிய அதே கொள்கையைத் தான் காங்கிரசும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பா.ஜ.க பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துகிறது. அவரும் பெரும் நிறுவனங்களுக்கு நிலமும், மின்சாரமும் இன்னும் பல வளங்களை இலவசமாக தருகிறார். அவரது தலைமையில் அரசு அமைந்தால் எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது. காங்கிரசுக்கு மாற்று என பா.ஜ.க கூறுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள். மக்கள் விரோத கொள்கைகளில் இரு கட்சிகளும் ஒரே நிலையில்தான் உள்ளன.

மக்களின் நலன், மதசார்பின்மை ஆகியவற்றின் அடிப்படையிலான மாற்று கொள்கைகளுக்கு தேவை ஏற்பட்டிருக்கிறது. அதனை இடதுசாரிகளால் மட்டுமே அமல்படுத்த முடியும். எனவே மதசார்பற்ற ஜனநாயக கட்சிகள் அனைத்தும் இடதுசாரி கூட்டணியை ஆதரித்து 3 வது அணியை உருவாக்க வேண்டும். தமிழகத்தில் நடந்த மாநிலங்களவை தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளரை அ.தி.மு.க. ஆதரித்தது வரவேற்புக்குரியது. இதே ஒத்துழைப்பு இன்னும் வலுப்பட வேண்டும் என்றார் அவர். இதில் கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர்கள் ரங்கராஜன், வாசுகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago