முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமானி பிரவீண் குடும்பத்தினருக்கு மு.க.ஸ்டாலின் ஆறுதல்

திங்கட்கிழமை, 1 ஜூலை 2013      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, ஜூலை.2 - உத்தரகாண்டில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மதுரை  விமானி பிரவீண் குடும்பத்தினருக்கு திமுக பொருளாளர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார். உத்தரகாண்ட் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டபோது ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்ததில் பிரவீண் உயிரிழந்தார். அவரது உடல் அரசு மரியாதையுடன்  மதுரையில் தகனம் செய்யப்பட்டது.       

மதுரை டி.வி.எஸ்.நகரில் உள்ள பிரவீண் வீட்டுக்கு வந்த திமுக பொருளாளர் ஸ்டாலின் அங்கு பிரவீண் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பிரவீண் குடும்பத்தினருக்கு ஸ்டாலின் ஆறுதல் கூறினார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், பொன். முத்துராமலிங்கம் ஆகியோர் வந்தனர். முன்னதாக விருதுநகரிலிருந்து வந்த ஸ்டாலினுக்கு மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் தளபதி தலைமையில் திருநகரில் வரவேற்பளிக்கப்பட்டது.                 

விமானி பிரவீண் குடும்பத்தினருக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். மீட்புப் பணியில் ஈடுபட்டபோது உயிரிழந்த மதுரை மாநகரைச் சேர்ந்த இந்திய விமானப் படை விமானி பிரவீண் உயிரிழந்த செய்தி என்னைப் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பிரவீணின் அன்பு அன்னையாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்