முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்.எல்.சி. ஊழியர்களுக்கு ஆதரவாக நெய்வேலியில் பந்த்

வியாழக்கிழமை, 4 ஜூலை 2013      தமிழகம்
Image Unavailable

 

கடலூர்,  ஜூலை.5 - கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து(பொறியாளர்கள் சங்கம் தவிர) நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவு அனைத்து தொழிலாளர்களும் பணிக்கு செல்லாததால் சுரங்கம்-1, சுரங்கம்-2 ஆகிய பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது. 

மேலும் நெய்வேலி தொழிலாளர்களின் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வணிகர்கள் நேற்று நெய்வேலி முழுவதும் கடையடைப்பு செய்தனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ, வேன் போன்ற எந்த வாகனமும் இயக்கப்படவில்லை. 

மந்தாரக்குப்பம், நெய்வேலி, டவுன்ஷிப், வடலூர், இந்திரா நகர் பகுதிகளில் என்எல்சி தொழிலாளர்களுக்கு ஆதரவாக பந்த் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் நிரந்தர தொழிலாளர்களும், ஒப்பந்த தொழிலாளர்களும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் முக்கிய பணிகளான கரிகள் வெட்டி எடுக்கும் பணி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே வெகு விரைவில் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி வெகுவாக பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.  ஜகோர்ட்டு தடை உத்தரவால் பொறியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த போராட்டத்தில் எந்த விதமான அசம்பாவிதமான சம்பவங்கள் நிகழாமல் தடுக்க 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் 1500-க்கும் மேற்பட்ட மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு கூட்டுரோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் எம்.பி. சுப்ராயன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், என்எல்சியில் நடக்கும் போராட்டம் யாருக்கும் எதிரானது அல்ல. என்எல்சியின் 5 சதவீத பங்கை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அமைச்சரவையில் எடுத்த முடிவு தான் நாட்டில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசு 3 கொள்கைகளை கடைப்பிடிக்கிறது. உலக மயம், தாராள மயம், தனியார் மயம் என்ற கொள்கைகளை கடைப்பிடிக்கிறது. ஜவகர்லால் நேரு காலத்தில் உள்ள 244 பொதுத்துறை நிறுவனங்களை தனிப்பட்ட முதலாளிகளுக்கு விற்று விடுவதே தனியார் மயம். மத்திய அரசு தொழிலாளர் விரோத போக்கை கடைப்பிடித்து முதலாளிகள் உயர வழிவகுக்கிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்