முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீல் உடைக்கப்பட்ட தபால் ஓட்டுகளை ஏற்றுக்கொள்ளக் கூடாது

செவ்வாய்க்கிழமை, 3 மே 2011      அரசியல்
Image Unavailable

மதுரை,மே.4 - தபால் ஓட்டுக்களின் சீல் உடைக்கப்பட்டிருந்தால் தேர்தல் அதிகாரிகள் அவற்றை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் மதுரையில் தெரிவித்தார்.  தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த மாதம் 13 ம்தேதி அமைதியாக நடந்து முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 13 ம்தேதி நடக்கிறது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எவ்வாறு எண்ண வேண்டும் என்பது குறித்து தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் தேர்தல் அலுவலர்களுக்கு 5 மண்டலங்களாக  பிரிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் மாவட்ட கலெக்டர், தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், ஒரு பயிற்சியாளர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்த பயிற்சியை தமிழக தலைமை அதிகாரி பிரவீன்குமார் நடத்தி  வருகிறார். மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் 50 தொகுதிகளுக்கான பயிற்சி வகுப்பு மதுரையில் நேற்று நடந்தது. இதற்காக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி அமுதா ஆகியோர் சென்னையில் இருந்து நேற்று காலை மதுரை வந்தனர்.

    மதுரை கலெடர் அலுவலகத்தில் நடந்த பயிற்சி முகாமை துவக்கி வைத்து தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் பேசியதாவது, வாக்கு எண்ணிக்கையின் போது 14 மேஜைகளில் உள்ள ஒவ்வொரு சுற்றும் முடிந்த பின்னர் தேர்தல் பார்வையாளர் ஒப்புதல் பெற்ற பின்னரே அறிவிக்க வேண்டும். வாக்குச்சாவடிகளில் பணியாற்றியவர்களுக்கு தபால் ஓட்டுக்கள் வழங்கப்பட்டன. அவர்களது தபால் ஓட்டுக்கள் சீல் உடைக்கப்பட்டிருந்தால் அவற்றை ஏற்றுக்கொள்ளக்கூடாது.த அவற்றை தனி பதிவேட்டில் பதிவு செய்து, அதற்கான பெட்டியில் போட்டுவிட வேண்டும். தேர்தல் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தால் அது தொடர்பான குற்றப்பத்திரிகை விவரங்களையும் சேர்த்து அனுப்ப வேண்டும் என்றார். பயிற்சியின் போது, வாக்கு எண்ணிக்கையின் போது பாதுகாப்பு அறையிலிருந்து மின்னணு இயந்திரங்களை எடுத்து வருவது எப்படி? சீலை எவ்வாறு உடைப்பது எனபது குறித்து மாதிரி இயந்திரத்தை இயக்கி காண்பித்து பயிற்சி அளிக்கப்பட்டது.    இந்த பயிற்சி முகாமில் காலையில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மூன்று மாவட்டங்களை சேர்ந்த 24 தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  பிற்பகலில் தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 26 தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மதுரை மருத்துவ கல்லூரி அரங்கை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடுவோருக்கான பயிற்சி வகுப்பு இன்று புதுக்கோட்டையிலும், நாளை சென்னையிலும் நடைபெறுகிறது.

   மதுரை மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளின் வாக்குபதிவு எந்திரங்கள் மதுரை மருத்துவ கல்லூரி அரங்கில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நேற்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் சீல்களை பார்வையிட்டார். உள்ளேயும், வெளியேயும் வெப் கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது. இதுசரியாக செயல்படுகிறதா என்றும் ஆய்வு செய்தார். இந்த மையத்திற்கு வரும் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் கட்சிகளின் ஏஜெண்டுகள் தினமும் வந்து செல்கின்றனர். அவர்கள் அனைவரையும் வீடியோ கேமராவில் பதிவு செய்ய வேண்டும் என்று பிரவீன்குமார் உத்தரவிட்டார்.

   இந்த பணிக்காக ஒவ்வொரு தொகுதிக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களுக்கு ஒரு வீடியோ கிராபர் வழங்க வேண்டும் அல்லது போலீசாரை பயன்படுத்தியாவது வீடியோ எடுக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டார். பிரவீன்குமாருடன் கலெக்டர் (பொறுப்பு) மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணப்பன், எஸ்பி அஸ்ராகார்க் ஆகியோர் உடன் வந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago