முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்வி வளர்ச்சிக்காக ரூ.15,965 கோடி தந்தவர் முதல்வர்

வியாழக்கிழமை, 4 ஜூலை 2013      அரசியல்
Image Unavailable

 

மதுரை,ஜூலை 5 -  தமிழக்த்தின் கல்வி வளர்ச்சிக்காக இந்த ஆண்டிற்கும் மட்டும் ரூ.15965 கோடி அள்ளித்தந்தவர்முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.  மதுரை மாவட்டம், ஓ.சி.பி.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்  நடைபெற்ற விழாவில்  தமிழக முதலமைச்சரின் சிறப்புத் திட்டங்களான மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் கீழ் 5100 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.6,78,24,900 மதிப்பிலான மடிக்கணினிகளை  கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ  வழங்கினார்.மதுரை மாவட்டம் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் விழா மதுரை வடக்கு மண்டலத்திற்குட்பட்ட ஓ.சி.பி.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பெ.ரவீந்திரன்  தலைமையில் நடைபெற்றது.  இவ்விழாவில்  கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ  பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கி பேசியதாவது, தமிழக முதலமைச்சர்  இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் கல்வி என்பது மிக, மிக அவசியமாகும் எனக்கருதி உலகநடப்புகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற உயரிய சிந்தனையின் அடிப்படையில் 12ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கும், அரசு உதவி பெறும் பொறியியல், பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி வருகிறார்கள்.  இதன் மூலம் உலக அளவில் நம் மாணவ,மாணவியர்கள் போட்டி போட்டு கல்வி திறனை வளர்த்துக்கொள்ள நல்ல வாய்ப்பு உள்ளது.  

இந்த விலையில்லா மடிக்கணினியை பெறும் மாணவச்செல்வங்கள் அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும்.  குடும்ப சூழ்நிலையின் காரணமாக மாணவர்கள் கல்வியை இடையில் நிறுத்தக் கூடாது என்ற நோக்கத்தில் கல்வி உதவித்தொகைகளை தமிழக முதலமைச்சர்  வழங்கி வருகிறார்கள்.  மேலும்,  தமிழக முதலமைச்சர் அம்மா தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்காக இந்த ஆண்டு ரூ.15,965 கோடி நிதி ஒதுக்கீடு செய்து இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தை கல்வியில் முதன்மை மாநிலமாக திகழ வேண்டும் என்பதற்காக மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறார்கள்.              

       மதுரை மாவட்டத்தில் கடந்த கல்வியாண்டில் 23151 மாணவர்களுக்கு ரூ.33 கோடியே 33 இலட்சத்து 51 ஆயிரத்து 249 மதிப்பிலான மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 22101 பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படவுள்ளது.  மேலும், 30,006 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.6 கோடியே 65 இலட்சத்து 59 ஆயிரத்து 357 மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.  1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் 2,15,867 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களும், 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் 1,66,867 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா நோட்டுப்புத்தகங்களும் வழங்கப்பட்டுள்ளன. கல்வியில் முன்னேற்றம் அடைந்தால் தான் நாடு முன்னேற்றம் அடையும் என்ற சீரிய நோக்கத்தோடு நமது தமிழக முதலமைச்சர் அம்மா கல்வித்துறைக்கென தனிக்கவனம் செலுத்தி, பல்வேறு சிறப்புத்திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள்.  இன்று (04.07.2013) 5100 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.6 கோடியே 78 இலட்சத்து 24 ஆயிரத்து 900 மதிப்பிலான விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது.  

நமது  தமிழக முதலமைச்சர் 2023ல் தமிழ்நாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்று எண்ணற்ற தொலை நோக்கு திட்டங்களை வகுத்திருக்கிறார்கள். அதனடிப்படையில் நமது மாணவச்செல்வங்களை தொழில்நுட்ப ரீதியாக உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லவும், நமது தமிழ்நாட்டை மற்ற மாநிலங்களை காட்டிலும் முதன்மையான மாநிலமாக உருவாக்கிடவும், தீட்டப்பட்ட தொலைநோக்கு திட்டமே விஷன் 2023 திட்டமாகும்.  இதன் மூலம் தமிழகம் தொழில் வளர்ச்சியில் பெரிய முன்னேற்றம் அடையவுள்ளது.  இதனை கருத்திற்கொண்டு மாணவ, மாணவிகள் திறமையான கல்வி அறிவை வளர்த்து நாட்டின் முன்னேற்றத்திற்காக செயல்படவேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா,  வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ், மாமன்ற உறுப்பினர் சுகந்தி அசோக், உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக மாவட்ட கல்வி அலுவலர் அமுதவல்லி  வரவேற்றுப்பேசினார்.  முடிவில் ஓ.சி.பி.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் செ.உதயகுமாரி நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்