முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானிடம் மன்னிப்பு கேட்பதா - அமெரிக்க மறுப்பு

வியாழக்கிழமை, 5 மே 2011      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன்,மே.5 - பாகிஸ்தானுக்குள் அனுமதியின்றி சென்று அங்கு தாக்குதல் நடத்தி பின்லேடனை கொன்றதற்காக அந்நாட்டிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லை என்று அமெரிக்க நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

அமெரிக்காவில் உள்ள இரட்டை கோபுரம், ராணுவ தலைமையகமான பெண்டகன் உள்ளிட்ட இடங்களை ஒசாமா பின்லேடன் தலைமையிலான அல்கொய்தா இயக்கத்தினர் சில ஆண்டுகளுக்கு முன்பு தாக்கினார்கள். இந்த தீவிரவாத தாக்குதலில் கிட்டத்தட்ட 6 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியானார்கள். இவர்களில் நூற்றுக்கணக்கான இந்தியர்களும் அடங்குவர். ஒசாமா பின்லேடன் தலைமையிலான அல்கொய்தா இயக்கத்தின் இந்த தாக்குதல் அமெரிக்காவை மட்டுமல்ல, உலகையே நிலைகுலைய வைத்தது. 

அன்று முதல் சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை எப்படியாவது உயிரோடு பிடிப்பது, அல்லது தீர்த்துக்கட்டுவது என்ற முனைப்போடு காரியத்தில் இறங்கியது அமெரிக்கா. அமெரிக்காவின் இந்த முயற்சி பல ஆண்டுகள் நீடித்தது. ஆனால் பாகிஸ்தானோ பின்லேடன் தனது நாட்டில் இல்லவே இல்லை என்று ஒரேயடியாக மறுத்து வந்தது. பின்லேடன் ஆப்கானிஸ்தானில் மலைக் குன்றுகளில் தங்கியிருப்பான் என்பது போல பாகிஸ்தான் பேசி வந்தது. 

இந்த நிலையில் பயங்கரவாதி பின்லேடன் இஸ்லாமாபாத் அருகே ஒரு சொகுசு பங்களாவில் பதுங்கியிருப்பதை அமெரிக்க உளவுத் துறை கண்டுபிடித்தது. ஆனால் அந்த தகவலை பாகிஸ்தானிடம் சொல்லவில்லை. அப்படி சொன்னால் பின்லேடனுக்கு தகவல் போய் விடும். அவன் தப்பி விடுவான் என்று கருதிய அமெரிக்கா நேரடியாக களத்தில் குதித்தது. 2 தினங்களுக்கு முன் அமெரிக்க ஹெலிகாப்டர்கள் அங்கு விரைந்து பின்லேடன் தங்கியிருந்த சொகுசு பங்களாவில் குண்டு மழை பொழிந்தன. 

அப்போது இரு தரப்பினருக்கும் கடும் சண்டை மூண்டது. இந்த சண்டை சுமார் 40 நிமிடம் நீடித்தது. அப்போது தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக பயங்கரவாதி பின்லேடன் தனது மனைவியை கேடயமாக பயன்படுத்தியதாக கூட தகவல்கள் தெரிவிக்கின்றன. இறுதியில் இந்த சண்டையில் ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டான். தலையில் குண்டு பாய்ந்த நிலையில் அவனது கோர முகம் பல்வேறு மீடியாக்கள் மற்றும் பத்திரிக்கைகளிலும் வெளிவந்தன. 

பின்லேடன் கதையை வெற்றிகரமாக முடித்து விட்டதாக அமெரிக்கா பெருமிதத்தோடு கூறி வருகிறது. ஆனால் இதிலும் சில குழப்பங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. பின்லேடனை அமெரிக்கா உயிரோடு பிடித்து விடக்கூடாது என்பதற்காக அவனது மெய்க்காப்பாளர்களே அவனை சுட்டுக் கொன்றதாக கூட மற்றொரு தகவல் கூறுகிறது. இதில் எது உண்மை என்பது புரியவில்லை. ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது. பின்லேடன் கொல்லப்பட்டு விட்டான் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. 

அவனது உடல் இறுதிச் சடங்குகளுக்கு பிறகு கடலில் வீசப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இத்தனையும் பாகிஸ்தானுக்கு தெரியாமலேயே நடந்து முடிந்துள்ளது. இதை பாகிஸ்தானும் ஊர்ஜிதப்படுத்தி உள்ளது. இப்படி பாகிஸ்தானுக்குள் அனுமதி இல்லாமல் சென்று காரியத்தை முடித்ததற்காக அந்நாட்டிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று அமெரிக்க நிர்வாகம் உறுதிபட கூறியுள்ளது. இது குறித்து வாஷிங்டனில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அந்நாட்டின் செய்தி துறை அமைச்சர் கூறுகையில், 

பாகிஸ்தானிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்றார். காரணம், பின்லேடன்தான் தங்களின் முதல் எதிரி. அவன் ஆயிரக்கணக்கான அப்பாவிகளை கொன்று குவித்தவன். அவன் ஒன்றும் இஸ்லாமிய மத தலைவர் அல்ல, ஒரு தீவிரவாதி. அவனை கொன்றதில் தப்பில்லை. எனவே பாகிஸ்தானிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று அமெரிக்க அமைச்சர் கூறினார். மேலும் பின்லேடன் கொல்லப்பட்டதை அமெரிக்காவில் வாழும் இஸ்லாமியர்களும், இதர நாடுகளில் வாழும் இஸ்லாமியர்களும் கூட வரவேற்கிறார்கள். தீவிரவாதம் ஒழிக்கப்பட்டதை இந்த உலகமே வரவேற்கிறது என்றும் அந்த அமைச்சர் தெரிவித்தார். ஆகவே பாகிஸ்தானுக்குள் அனுமதியின்றி சென்றதற்காக மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago