முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளவரசன் மரணம்: பா.ம.க.விற்கு தொடர்பு இல்லை: அன்புமணி

வெள்ளிக்கிழமை, 5 ஜூலை 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.6 - தர்மபுரி இளவரசன் மரணம் குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பா.ம.க. இளைஞர் அணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இளவரசன் மரணம் மிகுந்த வேதனை அளித்தது. உயிரிழப்பு தொடர்பாக மிகவும் வருந்துகிறோம். இளவரசன் - திவ்யா பிரச்சினை இருவரின் தனிப்பட்ட பிரச்சினையாகும்.

இதில் யாரும் தலையிட வேண்டாம் என்று ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறோம். இந்த விவகாரத்துக்கும், பா.ம.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

இளவரசன் மரணம் கொலையா? அல்லது தற்கொலையா? என்பதை போலீசார் தீவிரமாக விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்