முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை அண்ணா நகர் பகுதி பிரமுகர் நீக்கம்: முதல்வர்

சனிக்கிழமை, 6 ஜூலை 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.7 - தென் சென்னை வடக்கு மாவட்டம் அண்ணா நகர் பகுதி ஜெயலலிதா பேரவை தலைவர் எஸ்.குமரேசன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. கொள்கையின் குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் தென் சென்னை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.குமரேசன் (அண்ணாநகர் பகுதி ஜெயலலிதா பேரவை தலைவர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்