முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகவிலிருந்து தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

சனிக்கிழமை, 6 ஜூலை 2013      தமிழகம்
Image Unavailable

 

சேலம் ஜூலை.7 - கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று இரவு மேட்டூர் அணையை வந்தடைந்தது இதனால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சியைடந்துள்ளனர். தென்மேற்கு பருவ மழை கர்நாடக மாநிலத்தில் தீவிரம் அடைந்துள்ளது. இதனால் மைசூர் , குடகு, மண்டியா சிக்மங்களூர், உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால் குடகு, மைசூர் மாவட்டங்களில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. 

இந்த மழையின் காரணமாக  மைசூர் மாவட்டத்தில் உள்ள கபினி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து சுமார்  42 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்தது. பின்னர் இது 50 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் கபினி அணை நிரம்பி அபாய கட்டத்தை எட்டியது. இதனையடுத்து அணைக்கு வரும் தண்ணீர்  பாதுகாப்பு காரணமாக அப்படியே திறந்துவிடப்படடுகிறது தே போல் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்தும் 1489 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இந்த வெள்ளம் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நேற்று முன் தினம் நள்ளிரவு 12 மணியளவில் வந்தடைந்தது. முதலில் குறைவாக வந்த தண்ணீர் படிப்படியாக அதிகரித்து நேற்று காலை நிலவரப்படி 40 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்துகொண்டு இருந்தது.  இதனால் ஒகேனக்கல் அணையில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

இந்த தண்ணீர் படிப்படியா நேற்று நள்ளிரவு மேட்டூர் அணையை வந்தடைந்தது. இந்த தண்ணீர் வரத்தின் காரணமாக மேட்டூர் அணையின்  தண்ணீர் மட்டம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. . தொடர்ந்து  தண்ணீர்வரத்து அதிகாரித்துவந்ததால் அணையின் தண்ணீர் மட்டம் ஒரு வாரத்தில் 80 அடியை எட்டி விடும்.  அணையின் தண்ணீர் மட்டம் அதிகரித்து வருவதால் குடிதண்ணீர்  தேவைக்காக அணையிலிருந்து ஆயிரத்திலிருந்து 3 ஆயிரம் கன அடியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

மேலும் அணையின் நிர் வரத்து அதிகரித்து வருவதையொட்டில் பொதுப்பணித்துறையினர் அணையின் பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு தண்ணீர்வரத்து அதிகரித்து இருப்பதால் மேட்டூர் அணையின் nullதண்ணீர் மட்டம் வெகுவாக அதிகரித்து வருகிறது. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகளும், குடிதண்ணீருக்காக பயன்பெறும்  சேலம்,தர்மபுரி,நாமக்கல்,கிருஷ்ணகிரி மாவட்ட மக்களும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணையின் தண்ணீர் மட்டும் தற்போது 48 அடியாக உள்ளது. இன்னும் 42 அடி உயர்ந்தால் இம்மாத  இறுதிக்குள் டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்