முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திரைப்படத் தயாரிப்பாளர்கள் கவுன்சிலுக்கு விரைவில் தேர்தல்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஜூலை 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜூலை.8 - தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் கவுன்சில் தொடர்பான வழக்கு விசாரணையின்போது, கவுன்சிலுக்கு புதிதாக தேர்தல் நடத்த சம்பந்தப்பட்ட தரப்பினர் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டனர். இதனால் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் கவுன்சிலுக்கான புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் விரைவில் நடைபெறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் கவுன்சிலில் எஸ்.ஏ.சந்திரசேகரன் தரப்பினர், கேயார் தரப்பினர் என இரு வேறு அணிகளாகப் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இரண்டு தரப்பினருக்கும் இடையே நீதிமன்றத்தில் அடுத்தடுத்து பல வழக்குகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் சனிக்கிழமை கவுன்சிலின் சிறப்பு பொதுக் குழுக் கூட்டத்தை கூட்டப் போவதாக எஸ்.ஏ.சந்திரசேகரன் தரப்பினர் அறிவித்திருந்தனர். இந்தப் பொதுக் குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி தயாரிப்பாளர் கலைப்புலி ஜி.சேகரன் உள்ளிட்ட 3 பேர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதி ஆர்.சுதாகர் முன்னிலையில் இம்மாதம் 4-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, கவுன்சில் நிர்வாகிகளை தேர்வு செய்வதற்காக புதிதாகத் தேர்தல் நடத்த இரண்டு தரப்பினரும் ஒப்புதல் அளித்தனர். இதனையடுத்து சனிக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட பொதுக் குழுக் கூட்டத்துக்கு நீதிபதி இடைக்காலத் தடை விதித்தார். கவுன்சிலுக்கு புதிய தேர்தல் நடத்துவது தொடர்பாக இரண்டு தரப்பினரும் ஜூலை 15-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி சுதாகர், விசாரணையை ஜூலை 15-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago