முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லை - செங்கோட்டை கூடுதல் ரயில் இன்று இயக்கம்

திங்கட்கிழமை, 8 ஜூலை 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.9 - திருநெல்வெலி மற்றும் செங்கோட்டை இடையே இன்று (9ம் தேததி ) முதல் கூடுதல் ரயில் இயக்கப்படுகிறது. நெல்லை-தென்காசி இடையே மீட்டர் கேஜ் ரயில்வே பாதை, அகலப்பாதையாக மாற்றப்பட்டு ரயில் போக்குவரத்து நடந்து வருகிறது. இந்த வழித்தடத்தில் தற்போது ஒரே ஒரு பயணிகள் ரயில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் அறிவித்தபடி கூடுதல் ரயில் இயக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்தநிலையில் நெல்லை-செங்கோட்டை இடையே கூடுதல் ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இன்று (9-ந்தேதி) முதல் கூடுதல் ரயில் இயக்கப்படுகிறது. இதற்கான தொடக்க விழா அன்றையதினம் காலை 10.30 மணிக்கு நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெறுகிறது.

இன்று (9-ந்தேதி அன்று) தொடக்க விழா ரயில் மட்டுமே இயக்கப்படுகிறது. மறுநாள் (10-ந்தேதி) முதல் புதிய அட்டவணை படி நெல்லை-செங்கோட்டை இடையே ரயில்கள் இயக்கப்படும். அதன்படி கூடுதல் ரயில் நெல்லையில் இருந்து தினமும் காலை 6.45 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டையை 9 மணிக்கு சென்றடையும்.

பின்னர் செங்கோட்டையில் இருந்து காலை 10.50 மணிக்கு புறப்பட்டு நெல்லையை மதியம் 1.05 மணிக்கு வந்தடையும். மீண்டும் பிற்பகல் 2.15 மணிக்கு நெல்லையிலிருந்து புறப்பட்டு மாலை 4.40 மணிக்கு செங்கோட்டையை சென்றடையும். அங்கிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 8.15 மணிக்கு நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தை வந்தடையும்.

ஏற்கனவெ இயக்கப்பட்டு வரும் ரயில் அதே  நேரத்தில் வர்க்கம் போல் இயக்கப்படும்.  பழைய ரயில் நேர அட்டவணையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.

வருகிற 10-ந்தேதி முதல் தினமும் நெல்லையில் இருந்து காலை 6.45 மணி, 9.15 மணி, பிற்பகல் 2.15 மணி, மாலை 6 மணிக்கு செங்கோட்டைக்கு பயணிகள் ரயில் புறப்பட்டு செல்லும். மறு மார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து காலை 6.30 மணி, 10.50 மணி, மாலை 3.30 மணி மற்றும் மாலை 6 மணிக்கு நெல்லைக்கு பயணிகள் ரயில் புறப்பட்டு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்