முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனிமொழிக்காகவே காங்கிரசுடன் கருணாநிதி கூட்டணி: பரிதி

திங்கட்கிழமை, 8 ஜூலை 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.9 - கருணாநிதியின் தத்துப்பிள்ளை, கனிமொழியின் தம்பி மு.க. மணி எங்கே என்று அதிமுக செயற்குழு உறுப்பினர் பரிதி இளம்வழுதி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கனிமொழி எம்.பியாக காங்கிரசுடன் மீண்டும் தி.மு.க. கூட்டணி வைத்துக் கொண்டது என்றும் அவர் கூறியுள்ளார். 

அதிமுக அரசின் 2 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. 

அமைச்சர் வளர்மதி தலைமையில் நடந்த கூட்டத்தில் முன்னாள் திமுக அமைச்சரும் தற்போதைய அதிமுக செயற்குழு உறுப்பினருமான பரிதி இளம்வழுதி கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். தி.மு.க.விலிருந்து விலகி, அ.தி.மு.க.வில் இணைந்த பின்னர் பரிதி கலந்து கொண்ட முதல் கூட்டம் இது. ஆகையால் ஏராளமானோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது, அவர் பேசியதாவது, திமுகவில் இருப்பதோ கும்பல். ஆனால் அதிமுகவில் இருப்பதோ கூட்டம். கும்பல் கூடி கலைந்துவிடும். கூட்டமோ நிலையாக நிற்கும். நானும் உங்களுடன் நிலையாக நிற்பேன். தமிழக அரசியலில் குழப்பம் ஏற்படும் தேர்தலில் தான் திமுக எளிதில் வெற்றி பெறும். ஆரோக்கியமான தேர்தல் நடந்தால் திமுக வெற்றி பெறாது. 30 ஆண்டுகளாக திமுகவுக்காக  நான் உழைத்தேன். நான் அப்படி என்ன தவறு செய்துவிட்டேன். 1991-96ம் ஆண்டு சட்டசபையில் தனி எம்.எல்.ஏ.வாக செயல்பட்டேன். நான் மட்டும் அப்போது அதிமுகவில் இணைந்திருந்தால் உதயசூரியன் சின்னம் முடங்கியிருக்கும், கறுப்பு சிவப்பு கொடியும் கிடைத்திருக்காது. இலங்கையைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவனை கருணாநிதி தத்து எடுத்தார். கனிமொழிக்கு தம்பி இல்லாத குறையை போக்க மணி என்ற சிறுவனை தத்தெடுப்பதாக கருணாநிதி அறிவித்தார். மேலும் அந்த சிறுவனை மு.க. என்ற தனது இனிஷியலையும் போட வைத்தார். அந்த சிறுவன் திடீர் என்று காணாமல் போய்விட்டான். அவனை தேடிப்பிடித்து அழைத்து வந்தனர். ஆனால் மீண்டும் காணாமல் போய்விட்டான். இதை ஒரு கட்சிக்காரனாக இல்லை தமிழனாக கேட்கிறேன். அந்த சிறுவனை போலீசார் தான் கண்டுபிடிக்க வேண்டும். மேலும் அவனை கண்டுபிடிக்க நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.

மேலும் இலங்கைத் தமிழர்களின் ஆதரவாளர் என கூறிக்கொள்ளும் கருணாநிதி, தனது மகள் கனிமொழி மாநிலங்களவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே  காங்கிரசுடன் கூட்டணி அமைத்துக்கொண்டார். இது சந்தர்ப்ப வாதமல்லவா?  சர்ந்தர்ப்பவாதக் கூட்டணி அல்லவா?    சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அவர் இப்போது கூறுவது கூட அரசியல் நாடகம் தான்.

இவ்வாறு பரிதி இளம் வழுதி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்