முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. ஆட்சி டெண்டரை நடைமுறைப் படுத்தத் தடை

திங்கட்கிழமை, 8 ஜூலை 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.9 - தமிழக போக்குவரத்து துறையால் டிரைவிங் லைசன்ஸ் மற்றும் பதிவு சான்றிதழ் (ஆர்.சி.புக்) ஆகியவற்றை ஸ்மார்ட் கார்டு முறையில் மாற்றுவதற்கான அறிவிக்கப்பட்ட டெண்டர் நடைமுறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்மார்ட் சிப் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2010-ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமிழக அரசின் போக்குவரத்து துறையில் டிரைவிங் லைசன்ஸ் மற்றும் பதிவு சான்றிதழ் (ஆர்.சி.புக்) முறையை ஸ்மார்ட் கார்ட் மூலம் மாற்றுவதற்கு டெண்டர் விதித்தது.

விடப்பட்ட டெண்டரில் நொய்டாவை ஸ்மார்ட் சிப் நிறுவனம் மற்றும் பான்டன் சாப்ட்வேர் நிறுவனம் உள்பட பல்வேறு நிறுவனங்கள் கலந்து கொண்டன.

இதில் 293.72 கோடி ரூபாய் அளவுக்கு டெண்டர் கோரிய பான்டன் சாப்ட்வேர் நிறுவனத்திற்கு டெண்டர் ஒதுக்கப்பட்டது.

ஆனால், அந்த நிறுவனத்தை விடகுறைவாக டெண்டர் கோரிய ஸ்மார்ட் சிப் நிறுவனத்திற்கு டெண்டர் மறுக்கப்பட்டது. அதுவும் ரூபாய் 197.5 கோடிக்கு அந்த நிறுவனம் டெண்டர் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆகவே தனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அந்த நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

தனது மனு நிராகரிக்கப்பட்டதின் மூலம் அரசுக்கு 96.21 கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக தனது மனுவில் தெரிவித்திருந்தது. எனவே தனது மனுவை நீதிமன்றம் பரீசீலித்து உரிய முறையில் டெண்டரை ஒதுக்குமாறும் அதுவரை ஒதுக்கப்பட்ட டெண்டரை தடைவிதிக்க வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி கே.கே.சசிதரன் முன்பு வந்தது. அப்பொழுது நீதிபதி நியாயமான காரணமில்லாமல், உரிய விளக்கம் அளிக்காமல், வெளிப்படை தன்மையில்லாமல் டெண்டர் ஒதுக்கப்பட்டதால். பொது மக்களின் பணம் விரையமாவதை தடுக்கும் நோக்கத்தில் ஸ்மார்ட் கார்ட் திட்டத்திற்கான டெண்டருக்கு இடைக்கால தடை விதிப்பதாக உத்தரவிட்டு இந்த வழக்கை வரும் ஜூலை 22-ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்