முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சம்மனை வாங்க மறுத்தார் அஞ்சலி: வழக்கு தள்ளி வைப்பு

புதன்கிழமை, 10 ஜூலை 2013      சினிமா
Image Unavailable

சென்னை, ஜூலை.11 - நடிகை அஞ்சலி சம்மன் பெற மறுத்ததால், அவர் மீதான அவதூறு வழக்கு விசாரணை வரும் ஆகஸ்ட் 12ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கற்றது தமிழ் படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை அஞ்சலி, சில மாதங்களுக்கு முன்பு திடீரென ஐதராபாத்தில் தான் தக்கியிருந்த ஹோட்டலில் இருந்து மாயமானார். பின்னர், நான்கு நாட்களுக்குப் பிறகு போலீசில் சரணடைந்தார். அப்போது, தான் இதுவரை அம்மா என அழைத்த பாரதிதேவி தனது சித்தி என்றும், அவரும் அவரோடு இணைந்து இயக்குநர் களஞ்சியமும் தன்னைக் கொடுமைப்படுத்துவதாகவும், தனது சொத்துக்களை அபகரிக்கப் பார்ப்பதாகவும் புகார் கூறினார். ஆனால், தன் மீது அஞ்சலி சுமத்திய குற்றச்சாட்டை மறுத்த களஞ்சியம், சைதாப்பேட்டை பெருநகர 17-வது கோர்ட்டில் அஞ்சலி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையின் போது நடிகை அஞ்சலி நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்ப மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து இந்த வழக்கு  நேற்று விசாரணைக்கு வந்தது. ஆனால், அஞ்சலி சம்மனை பெற மறுத்து விட்ட நிலையில், வழக்கு மீதான விசாரணை ஆகஸ்ட் 12-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago