முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேஸ்புக்கில் ஏமாற்றியது உண்மை: நடிகை லீனாவின் காதலன்

புதன்கிழமை, 10 ஜூலை 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜூலை.11 - கர்நாடக அரசின் பெயரை சொல்லி வங்கிகள் மற்றும் தொழிலதிபர்களிடம் கோடிக்கணக்கான ரூபாயை சுருட்டிய மோசடி மன்னன் சுகாஷ் சந்திரசேகர் கொல்கத்தாவில் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.பின்னர் அவர் சென்னை கொண்டு வரப்பட்டார்.

பெங்களுாரை சேர்ந்த இவர் கர்நாடக அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் செய்யபடுவதாகவும் அதற்காக பணம் தேவைப்படுகிறது என்றும் மிகவும் துணிச்சலாக அச்சு அசலான போலி ஆவணங்களையும் தயாரித்து ஏமாற்றியதும் அம்பலமானது.

சென்னை அம்பத்தூரில் உள்ள கனரா வங்கியில் இதே பாணியில் போலியான ஆவணங்களை கொடுத்து சுகாஷ் ரூ.19 கோடி கடன் வாங்கியதும் கண்டு பிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக அந்த வங்கியின் துணை பொதுச்செயலாளர் நல்லசிவம் கொடுத்த புகாரில் வங்கி மேலாளர் கைது செய்யப்பட்டார். விதிமுறைகளை மீறி சுகாஷுக்கு கடன் கொடுத்த குற்றத்துக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவரோடு நடிகை லீனாவும் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

இந்த வழக்கில் சுகாஷையும் அவரது காதலி மரியா லீனா பாலையும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தேடி வந்தனர். 2 பேரும் டெல்லியில் பதேபுர்ை பகுதியில் பண்ணை வீட்டில் பதுங்கி இருந்த போது சென்னை போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டனர்.

அப்போது மயிரிழையில் சுகாஷ் தப்பி சென்றார். லீனாவை மட்டும் போலீசார் கைது செய்து சென்னை கொண்டு வந்து சிறையில் அடைத்தனர். போலீசில் அவர் அளித்த வாக்குமூலத்தில் சுகாஷ், நடிகையாக்குவதாக கூறி என்னை ஏமாற்றி விட்டார். ஆனால் சொகுசு வாழ்க்கை காரணமாக அவரிடமிருந்து என்னால் மீள முடியவில்லை என்று கூறினார்.

பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட லீனாவுக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை. தொடர்ந்து அவர் சிறையிலேயே இருக்கிறார்.

இதற்கிடையே சுகாஷ் டெல்லியிலும் கைவரிசை காட்டியிருப்பதை அம்மாநில போலீசார் கண்டுபிடித்தனர். அவர்கள் சுகாஷை தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேற்கு வங்காளத்தில் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்ட சுகாசை அழைத்து வருவதற்காக சென்னையில் இருந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் டெல்லி சென்றனர்.

நேற்று காலையில் ரெயில் மூலம் சுகாஷ் சென்னைக்கு கொண்டு வரப்பட்டார். சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் அவரை படம் பிடிப்பதற்காக ஏராளமான போட்டோ கிராபர்கள் காத்திருந்தனர். சுகாஷை படம் பிடிப்பதற்காக அவர்கள் முண்டியடித்தனர். அப்போது படம் எடுப்பதற்கு ஏதுவாக சுகாஷ் போஸ் கொடுத்தார்.

பின்னர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்ட சுகாஷ்டம் மத்திய குற்றப் பிரிவு கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் சிவக்குமார் ஆகியோரது மேற்பார்வையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நடிகை லீனா மரியா பாலுடன் காதல் மலர்ந்தது எப்படி? அவர் உங்கள் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் (நடிகையாக்குவதாக மோசடி) உண்மையா? என்பது போன்ற கேள்விகளை கேட்டு சுகாசிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதே நேரத்தில் சுகாஷ் அரங்கேற்றிய மோசடி வித்தைகள் குறித்தும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. கர்நாடக அரசின் பெயரை சொல்லி மோசடி செய்ததன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? அது தொடர்பான போலி ஆவணங்களை தயாரிப்பதற்கு உதவியவர்கள் யார்? என்பது போன்ற கோணத்திலும் சுகாசிடம் விசாரணை நடத்தப்பட்டது.

போலீசாரின் அனைத்து கேள்விகளுக்கும் சுகாஷ் பொறுமையாக பதில் அளித்தார். இதனை வாக்கு மூலமாக போலீசார், பதிவு செய்தனர். சுகாஷ் போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

எனது சொந்த ஊர் பெங்களூர். அப்பா பெயர் சந்திரசேகர். அம்மா பெயர் மாலா. பெங்களுார் நாகா பாவி கிராமத்தில் சிவா அபார்ட்மெண்ட்டில் வசித்து வந்தேன். பெங்களூர் கிரிஸ்ட் காலேஜில் படித்த நான் பாதியிலேயே படிப்பை நிறுத்தி விட்டேன்.

எனது பெற்றோர் ரப்பர் கம்பெனி நடத்தி வருகிறார்கள். எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும், சினிமா தயாரிப்பாளர் ஆக வேண்டும் என்று ஆசை இருந்தது. இதற்காக மோசடியில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்க தொடங்கினேன்.

லேப்-டாப்பில் என்னைப் பற்றிய விவரங்களை பதிவு செய்து கொண்டேன். ரூ.50 லட்சத்துக்கு பி.எம்.டபிள்யு ைஆடம்பர கார் வாங்க டி.டி. அனுப்பியது போலவும், பணத்தை கம்பெனிகாரர்கள் பெற்றுக் கொண்டது போலவும் லேப்-டாப்பில் பதிவு செய்து அதை மற்றவர்களிடம் காட்டினேன். நான் பெரிய பணக்காரன் என்று மற்றவர்களை நம்ப வைத்தேன்.

லேப்-டாப்பில் பெங்களூர் மாடல் அழகிகளின் போட்டோக்களை பதிவு செய்தேன். அவற்றை மற்றவர்களிடம் காட்டி சினிமா தயாரிப்பாளர் என்றும் என்னிடம் சான்ஸ் கேட்டு வந்த அழகிகள் என்றும் சொல்வேன்.

பெங்களூரில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜெயகுமார் ஓய்வு பெற்றார். அவரது பெயரை பயன்படுத்திக் கொண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வலம் வந்தேன். சிகப்பு விளக்கு பொருத்திய காரில் அதிகாரி போல் உலா வந்தேன்.

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த தொழில் அதிபரின் வெல்டிங் மிஷின் உற்பத்தி நிறுவனத்துக்கு கர்நாடக அரசிடம் இருந்து ரூ.120 கோடி ஆர்டர் பெற்றுத் தருவதாக அம்பத்தூர் கனரா வங்கி கிளையில் ரூ.19.75 கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டோம்.

கர்நாடக அரசின் சமூக நலத்துறை செயலாளர் ஜெயக்குமார் ஐ.ஏ.எஸ். என்று சொல்லி இந்த மோடியில் ்டுபட்டேன். இதற்காக அவரது போலியாக இ.மெயில் கடிதம் தயாரித்தேன். டெலிபோனிலும் அவரைப் போல பேசி நடித்தேன்.

இதே போல் சேலையூரைச் சேர்ந்த சக்கரவர்த்தி என்ற டெக்ஸ்டைல்ஸ் அதிபரிடம் கர்நாடக அரசிடம் சீருடை ஆர்டர் பெற்றுத் தருவதாக நானும், லீனா மரியாபாலும் சேர்ந்து ரூ.1 லட்சம் மோசடி செய்தோம். அவரிடமும் நான் ஜெயக்குமார் ஐ.ஏ.எஸ். என்று சொல்லி ஏமாற்றினேன்.

எனது செயலாளர் என்று சொல்லி லீனா மரியாபால் சக்கரவர்த்தியிடம் பேசினார். சொன்னபடி ஆர்டர் கிடைக்காததால் சக்கர வர்த்தி நேரடியாக கர்நாடக அரசிடம் விசாரித்தபோது ஜெயக்குமார் ஐ.ஏ.எஸ். என்று யாரும் இல்லை என்றும் சுகாஷ் என்பவர் தான் ஏமாற்றியுள்ளார் என்றும் கூறி இருக்கிறார்கள். இதனால் நானும் லீனாவும் தலைமறைவாகி விட்டோம்.

கேரளாவைச் சேர்ந்த ஜோசப் என்பவருக்கு பெல்லாரியில் இருந்து சுரங்க ஏலம் எடுத்து தருவதாக ரூ.3 லட்சம் ஏமாற்றினேன். கார் வாங்கித் தருவதாக பிரேம் என்பவரிடம் மோசடி செய்தேன்.

சென்னையைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரிடம் கார் வாங்கித் தருவதாக ரூ.2 லட்சமும், அனுபமாராவ் என்பவரிடம் ரூ.4.5 லட்சமும் பெற்றேன். மதுரையைச் சேர்ந்த ஒரு தியேட்டர் அதிபரிடமும் ரூ.10 ஆயிரம் ஏமாற்றினேன். அப்போது ஊமச்சிக்குளம் போலீசில் சிக்கினேன்.

சென்னை சேத்துப்பட்டில் அழகு நிலைய உரிமையாளரிடம் விலை உயர்ந்த கார் வாங்கித் தருவதாக ரூ.3 லட்சம் பெற்றேன். இதுபோல் தமிழ்நாட்டில் 6 மோசடிகளில் ்டுபட்டேன்.

நான் பேஸ்புக்கில் பல்வேறு நபர்களுடன் பேசுவது வழக்கம். லீனா மரியாபாலும் பேஸ்புக் மூலம் எனக்கு அறிமுகமானார். அவரை சினிமாவில் நடிக்க வைப்பதாக சொல்லி பழகினேன். அவரை ஏமாற்றினாலும் அவரை காதலித்தேன். கையில் லீனா என பச்சை குத்திக்கொண்டேன்.

தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், பிரெஞ்ச் என 8 மொழிகள் தெரியும். மோசடி பணத்தில் எனக்கு பாதுகாப்புக்கு மட்டும் மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் 10 மெய்க்காப்பாளர்கள் வைத்துக் கொண்டேன். இதற்காக மாதம் ரூ. 1 1/2 லட்சம் செலவிட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்