முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கறுப்புப்பண விவகாரம் குறித்த மனு: தீர்ப்பு ஒத்திவைப்பு

வியாழக்கிழமை, 5 மே 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,மே.5 - வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கறுப்புப்பணம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு குழுவை அமைக்க கோரும் மனு மீதான தீர்ப்பை சுப்ரீம்கோர்ட்டு தள்ளிவைத்தது. 

வெளிநாடுகளில் இந்தியர்கள் குறிப்பாக பெரும் பணக்காரர்கள், தொழிலதிபர்கள்,அரசியல்வாதிகள் முறைகேடாக சம்பாத்தியம் செய்த லட்சக்கணக்கான கோடி ரூபாயை சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் உள்ள வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கிறார்கள். அதன் விபரத்தை வெளிக்கொண்டுவரவும் கறுப்புப்பணத்தை கைப்பற்றவும் நடவடிக்கை எடுக்க சிறப்பு விசாரணை குழு அமைக்கும்படி சுப்ரீம்கோர்ட்டில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை நேற்று சுப்ரீம்கோர்ட்டில் நீதிபதிகள் பி.சுதர்சன்ரெட்டி, எஸ்.எஸ்.நிஜார் ஆகியோர் முன்னிலையில்  விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது மத்திய அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர்,சிறப்பு குழு அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார். வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப்பணம் தொடர்பாக ஏற்கனவே சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு, உளவுப் பிரிவு  ஆகிய துறைகளின் முக்கிய அதிகாரிகளைக் கொண்ட குழு விசாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony