முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அலைக்கற்றை ஊழலை மறைக்க தி.மு.க. தனி ஈழம் கோருகிறது: பா.ஜ.க

வியாழக்கிழமை, 5 மே 2011      ஊழல்
Image Unavailable

 

சென்னை,மே.5 - 2 ஜி அலைக்கற்றை ஊழல் விவகாரத்தை மறைக்கவே இலங்கை தமிழர்களுக்காக தனி ஈழ கோரிக்கையை தி.மு.க வலியுறுத்துகிறது என்று பா.ஜ.கவின் அகில இந்திய செயலாளர் முரளிதர் ராவ் குற்றம் சாட்டினார். பா.ஜ.க.வின் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னை தி. நகரில் உள்ள அக்கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த முரளிதர் ராவ் கூறியதாவது, 

பா.ஜ.க.வை பொறுத்தவரை தமிழர்கள், இந்தியர்கள், அவர்கள் எந்த நாட்டில் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்காக நாங்கள் குரல் கொடுப்போம். இலங்கை  தமிழர்களை கொடூரமான முறையில் கொன்ற இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளி என்று ஐ.நா. சபை அறிவித்துள்ளது. 

ராஜபக்சே மீது நீதிமன்ற ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க மக்களவைக்கு உள்ளேயும், வெளியேயும் குரல் கொடுத்து வருகிறது. ஆனால் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து இந்த விஷயத்தில் மவுனம் சாதித்தே வருகிறது. இந்த மவுனத்தை கலைத்து தமிழர்களுக்கு அரசியல் சமூகம், பொருளாதாரம் உட்பட அனைத்து வகையான உரிமைகளும் கிடைக்க மத்திய அரசு வழிவகை காண வேண்டும். 

இலங்கையில் தனி ஈழம் அமைய வேண்டும் என்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. 2 ஜி அலைக்கற்றை ஊழல் விவகாரத்தை மறைப்பதற்காகவே தி.மு.க. இலங்கை தமிழர் பிரச்சினையை பற்றி பேசி வருவதுடன் தனி ஈழம் கோரிக்கையை விடுக்கிறது என்றார்.  தனியார் பள்ளி கட்டண நிர்ணயம் குறித்து பேசிய பொன். ராதாகிருஷ்ணன், கல்வி கட்டணத்தை முன்பே நிர்ணயம் செய்யாமல் விட்டது தவறான விஷயம். இப்போது கட்டணம் நிர்ணயித்தாலும் தி.மு.க. ஆட்சி தொடர்ந்தால்தான் அது செல்லுகிற வகையில் இருக்கும். மாற்று ஆட்சி வந்தால் அதை ஏற்றுக் கொள்வார்களா என்கிற சந்தேகமும் இருக்கிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago