முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலோர பாதுகாப்பை வலுப்படுத்த காவல் நிலையங்கள் அதிகரிப்பு

வியாழக்கிழமை, 5 மே 2011      இந்தியா
Image Unavailable

 

ஐதராபாத், மே 5 - கடற்பகுதியின் பாதுகாப்பை பலப்படுத்த கடலோரங்களில் மேலும் 15 புதிய கடலோர காவல் நிலையங்கள் அமைக்கப்படும் என்று ஆந்திர டி.ஜி.பி. கே.அரவிந்தராவ் தெரிவித்தார். கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ம் தேதி மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதலை நடத்தி 166 பேரை சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதல் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலை நடத்திய பாகிஸ்தான் தீவிரவாதிகள் பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் இருந்து படகுகள் மூலம் அரபிக் கடல்வழியாக மும்பை வந்து இந்த பயங்கர தாக்குதலை நடத்தினர். இதுபோல் கடல்வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுக்கும் வகையில் இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்கு கடலோர மாநிலங்களில் கடலோர காவல் நிலையங்களை அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்தது. அதன்படி மகாராஷ்ட்ரா, கர்நாடகம், கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட கடலோர மாநிலங்களில் 70 க்கும் மேற்பட்ட கடலோர காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற காவல் நிலையங்களை ஆந்திராவில் மேலும் அதிகரிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் உதவியுடன் ஆந்திராவில் மேலும் 15 புதிய கடலோர காவல்நிலையங்கள் அமைக்கப்படும் என்று அம்மாநில போலீஸ் டி.ஜி.பி. கே.அரவிந்தராவ் தெரிவித்தார். இந்த போலீஸ் நிலையங்களுக்கான காவலர்கள் முதலில் தேர்வு செய்யப்டுவார்கள் என்றும் அதன்பிறகு இந்த போலீஸ் நிலையங்கள் படிப்படியாக அபிவிருத்தி செய்யப்படும் என்றும் அவர் கூறினார். 

இந்த போலீஸ் நிலையங்களில் வழக்கமான மாவட்ட போலீசார் யாரும் நியமிக்கப்பட மாட்டார்கள். இந்த போலீஸ் நிலையங்களுக்கு பிரத்தியேகமாக பயிற்சி பெற்ற போலீசார் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்றும் இதற்கான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் ராவ் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago