முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் வெள்ளம்: 225 பேர் பலி

சனிக்கிழமை, 13 ஜூலை 2013      உலகம்
Image Unavailable

 

பெய்ஜிங், ஜூலை. 14​ - சீனாவில் சிசுவான் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள ஏரிகள், குளங்கள் நிரம்பியுள்ளன. ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்களால் சிசுவான் மாகாணத்தின் தென் மேற்கு பகுதியில் மழைக்கு 31 பேர் பலியாகினர். ஏராளமானோரை காணவில்லை. எனவே மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது. இந்த நிலையில் 200 பேர் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர். 

மழை வெள்ளம் காரணமாக இப்பகுதியில் 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளை இழந்து தவிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் ரோடுகள், ரயில் தண்டவாளங்கள் அடித்து செல்லப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. இது போன்று யுனான், ஹெனான், ஹியூபே ஆகிய மாகாணங்களிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கும் சுமார் 25 பேர் பலியாகி உள்ளனர். எனவே சாவு எண்ணிக்கை 235 ஆக உயர்ந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்