முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்னோடெனை வெளியேற்ற புதினுடன் ஒபாமா பேச்சு

சனிக்கிழமை, 13 ஜூலை 2013      உலகம்
Image Unavailable

 

மாஸ்கோ, ஜூலை. 14 - அமெரிக்காவின் என்.எஸ்.ஏ. உளவு நிறுவனத்தில் பணியாற்றியவர் ஸ்னோடென். சீனா, ரஷ்யா போன்ற பல நாடுகளின் இணையதளங்களை ஊடுருவி பல தகவல்களை அமெரிக்கா திருடியது என்று பகிரங்கமாக தகவல் வெளியிட்டார். அதன் பின் அமெரிக்காவை விட்டு வெளியேறி மாஸ்கோ ஏர்போர்ட்டில் தங்கி உள்ளார். இவரை பிடிக்க அமெரிக்கா தீவிரமாக உள்ளது. 

இந்த நிலையில் தனக்கு அரசியல் தஞ்சம் கேட்டு பல நாடுகளுக்கு கோரிக்கை விடுத்தார் ஸ்னோடென். கியூபா, வெனிசுலா ஆகிய நாடுகள் தஞ்சம் அளிக்க பரிசீலித்து வருகின்றன.இதற்கிடையில் உலகம் முழுவதும் உள்ள மனித உரிமை அமைப்புகளுக்கு ஸ்னோடென் இ மெயில் மூலமாக அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி பல மனித உரிமை அமைப்பின் பிரதிநிதிகள் மாஸ்கோவில் ஸ்னோடெனை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். 

பரபரப்பான சூழ்நிலையில் அவருக்கு தஞ்சம் அளிக்க கூடாது என ரஷ்ய அதிபர் புதினிடம் அமெரிக்க அதிபர் ஒபாமா கேட்டு கொண்டுள்ளார். இது குறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜேகார்னி கூறுகையில், ஸ்னோடென்னுக்கு அளித்துள்ள தற்காலிக தஞ்சம் காரணமாக அமெரிக்காவுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதற்கு ரஷ்யா உதவி வருகிறது. தன்னை நடுநிலையான நாடு என்றும் அமெரிக்காவின் நலன்களை பாதுகாப்போம் என்றும் முன்பு ரஷ்யா அளித்த வாக்குறுதியை மீறி செயல்படுவது போல் உள்ளது. இதனால் இரு நாட்டின் நல்லுறவும் பாதிக்கும். எனவே ஸ்னோடென்னை வெளியேற்றி அமெரிக்காவில் அவரை வழக்கை சந்திக்க ரஷ்யா உதவ வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்