முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு-காஷ்மீரில் 6 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் ஆரம்பம்

வியாழக்கிழமை, 5 மே 2011      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர்,மே.5 - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தல் 6 கட்டமாக அறிவிக்கப்பட்டது. அதில் முதல் கட்ட தேர்தல் நேற்று நடந்தது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் முதலில் சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டது. அதனையடுத்து தீவிரவாதிகள் நடவடிக்கைகள் குறைந்து அமைதி திருப்புவதால் உள்ளாட்சி தேர்தல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் உள்ள பஞ்சாயத்துக்களுக்கு 6 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டு நேற்று முதல் கட்டமாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் 4 வட்டாரங்களிலும் ஜம்மு டிவிஷனில் 8 பிளாக்குகளிலும் தேர்தல் நடந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். குப்வாரா மாவட்டத்தில் உள்ள லாங்கேட் பிளாக்கிலும் பாரமுல்லா மாவட்டத்தில் டாங்மார்க் பிளாக்கிலும் மக்கள் நேற்று ஆர்வமாக வாக்களித்தனர். காஷ்மீரின் தெற்கு பகுதியில் உள்ள அனந்தநாக் மாவட்டத்தில் பிரெங் பிளாக்கில் உறுப்பினர்களை தேர்வு செய்யும் தேர்தல் நேற்று நடந்தது. மத்திய காஷ்மீர் பகுதியில் உள்ள பத்ஹம் மாவட்டத்தில் உள்ள ஹக் பிளாக்கிலும் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. ஜம்மு பகுதியில் உள்ள ரியாசி மாவட்டம், உதம்பூர் மாவட்டம், கதுலா மாவட்டம், ஜம்மு மாவட்டம், தோடா மாவட்டம் கிஸ்த்வார் மாவட்டம்,பூஞ்ச்மாவட்டத்தில் உள்ள 8 பிளாக்குகளிலும் வாக்குப்பதிவு நடந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்