முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிங்கள அரசு மீது நடவடிக்கை எடுக்க சி.பி.எம். வாசுகி வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 5 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

திருவள்ளூர், மே.5 - சர்வதேச போர் விதிமுறைகளுக்கு எதிராக நிறாயுதபாணியான லட்சக்கணக்கான இலங்கை தமிழர்கள் மீது கொத்து குண்டு வீசி கொலை செய்த இலங்கை அரசு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மெத்திய அரசை சி.பி.எம். கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வாசுகி வலியுறுத்தி கேட்டுக்கொண்டார். இது குறித்த விபரம் வருமாறு:-

திருவள்ளூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இலங்கை வாழ் தமி மக்களை பாதுகாத்திட வலியுறுத்தியும், மத்திய அரசு உடன தலையிட்டு தீர்வு காண வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் வட்டச்செயலாளர் கே.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் ப.சுந்தரராஜன், மாவட்ட செயலாளர் கே.செல்வராஜ் ஆகியோர் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு ஏற்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து பேசினார். இறுதியில் சி.பி.எம். கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி கண்டன உரையாற்றினார்.

உ.வாசுகி ஆற்றிய கண்டன உரை வருமாறு:-

இலங்கை அரசு மீது உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். மனிதாபிமான மற்ற முறையிலும், கொடூரமான முறையிலும் இலங்கை தமிழர்கள் மீது ரசாயான கொத்து குண்டுகளை வீசு படுகொலை செய்த இலங்கை அரசை வன்மையாக  கண்டிக்கிறேன்.  தமிழ்களில் உயிருக்கும், உடமைகளுக்கும், வாழ்வுரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், இலங்கையில் வாழும் தமிழர்கள் சகல துறைகளிலும், சமத்துவமாக சமமாக குடியேருகிற சூழலை உருவாக்க வேண்டும்.

இலங்கையில் 30 ஆண்டுகளாக இனப்பிரச்சினை இருந்து வருகிறது. இந்த பிரச்சினை உடனே தீர்த்து சிக்கல்களை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். ஐ.நா. சபை 3 பேர் கொண்ட ஆய்வு குழு நியமித்துள்ளது. குழுவிற்கு இலங்கை அரசு அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இலங்கையில், லட்சக்கணக்கான தமிழர்கள் சித்திரவதை செய்ததை யார் பொறுப்பேற்பது. கடந்த 6 மாதங்களாக நடைபெறும் ஆயுத மோதலில், பத்திரிகையாளள்களுக்கும், செஞ்சிலுவை அமைப்புகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவை வெளியில் தெரியாமல் மறைக்கப்பட்டது.

இலங்கை அரசு செய்த குற்றங்கள் என்னென்ன, விடுதலை புலிகள் செய்த குற்றங்கள் என்ன, ஆய்வு செய்து ஐ.நா. குழு அவற்றில் நம்பத்தகுந்த குற்றங்கள் எவை என்பதை கூறுகிறு ஐ.நா.அறிக்கை.

சர்வதேச போர் விதிமுறைகளை மீறி செஞ்சிலுவை சங்க அலுவலர்கள் உள்ள இடங்களிலும், ஐ.நா சபை அலுவலகம் உள்ள இடங்களிலும், மருத்துவமனைகளிலும்,  மற்றும் நிறாயுதபாணியான அப்பாவி தமிழர்கள்  பலலட்சம் பேர்கள் மீதும் ரசாயான கொத்துகுண்டுகலை வீசி மனிதாபிமான அற்றமுறையில் சிங்கள ராணுவம் கொலை செய்துள்ளது.  இது ஐ.நா. குழு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. சிங்கள அரசு எப்படி இன படுகொலை செய்தது என்றும், விடுதலை புலிகள் செய்த தவறு என்ன என்றும் ஐ.நா. குழு சுட்டிக்காட்டி உள்ளது. போரில் காயம் பட்ட தமிழர்கள் கூட மயக்கம் மருந்து கொடுக்காமல் அறுவை சிகிச்சைகளை மனிதாபிமான அற்றமுறையில் சிங்கள அரசு செய்துள்ளதையும் ஐ.நா.குழு சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே ஐ.நா. குழு சுட்டிக்காட்டியுள்ள  செஞ்சிலுவை சங்கம், மருத்துவமனை உட்பட லட்சக்காணக்கான அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த சிங்கள அரசு மீது உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முன் வரவேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்த்தின் மூலம் வலியுறுத்துகிறேன்.இவ்வாறு வாசி கண்டன உரையாற்றினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago