முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கு அம்பேத்கர் சுடர் விருது

வியாழக்கிழமை, 5 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே 5 - பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்படுகிறது என தொல்.திருமாவளவன் கூறினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அம்பேத்கார் பிறந்தநாளையொட்டி ஆண்டுதோறும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சமூகம், இனம், மொழி ஆகிய தளங்களில் பாடாற்றும் சான்றோருக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விருது வழங்கும் விழா தள்ளி வைக்கப்பட்டது. சட்டசபை தேர்தல் நடந்ததால் ஏப்ரல் மாதம் நடக்க வேண்டிய விருது வழங்கும் விழா இந்த மாதம் இறுதியில் நடக்கிறது. 

இந்த ஆண்டுக்கான விருதுகள் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு அம்பேத்கார் சுடர் விருது, அமைச்சர் அன்பழகனுக்கு பெரியார் ஒளிவிருது, எழுத்தாளர் சோலைக்கு காமராஜர் கதிர் விருது, பவுத்த பெரியார் மறைந்த சுந்தர்ராஜனுக்கு அயோத்திதாசர் ஆதவன் விருது, பேராசிரியர் காதர்மொய்தீனுக்கு காயிதேமில்லத் பிறை விருது, கவிஞர் தணிகை செல்வனுக்கு செம்மொழி ஞாயிறு விருது ஆகியோருக்கு வழங்கப்படுகின்றன.

ஒசாமா பின்லேடனை அமெரிக்க படை பாகிஸ்தான் அனுமதி இல்லாமல் சுட்டுக் கொன்றது கண்டிக்கத்தக்கது. ராமேசுவரத்தில் தொடர்ந்து தமிழர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். இதனால் இலங்கையுடன் உள்ள உறவுகளை இந்திய அரசு துண்டிக்க வேண்டும்.

இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறினார். 

பேட்டியின் போது ரவிக்குமார் எம்.எல்.ஏ., மாநில செய்தி தொடர்பாளர் வன்னிஅரசு மற்றும்  பாவலன் ஆகியோர் உடனிருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்