முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் துப்பாக்கிச் சூடு - ஆய்வு செய்ய ஏ.டி.ஜி.பி. வருகை

வியாழக்கிழமை, 5 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

எழுமலை,மே.5 - திருமங்கலம் அருகே வில்லூர் கிராமத்தில் கடந்த 1ம்தேதி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இது குறித்து ஆய்வு செய்ய ஏ.டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன் வில்லூர் கிராமத்திற்கு வந்து ஆய்வு செய்தார்.  கடந்த 1-ம் தேதி இருபிரிவினருக்கிடையே நடந்த மோதலை தொடர்ந்து போலீசார் தடியடியிலும், துப்பாக்கிச் சூட்டிலும் இறங்கினர். சுமார் 84 பேர் இந்த கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டனர். துப்பாக்கிச்சூட்டில் ஒருவருக்கு காலிலும், மற்றொருவருக்கு தொடையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களும் தடியடியில் காயம்பட்டவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த கலவரம் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக வில்லூர் கிராமத்திற்கு ஏ.டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன் வந்தார். ஆய்வு செய்த பிறகு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, கடந்த 1ம் தேதி வில்லூரில் நடந்த சம்பவம் விரும்பத்தகாதது. இந்த சம்பவம் தொடர்பாக 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆதிதிராவிட மக்களுக்கு இங்கு சில கொடுமைகள் நடந்துள்ளன. அவர்களுக்கு சாலைகள் சீர்செய்யப்பட்டு போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்படும். இந்த கொடுமைகள் குஇத்து செப்டம்பர் மாதம் புகார் ஒன்று கொடுத்துள்ளனர். நான் இந்த கலவரம் தொடர்பாக ஆய்வு செய்துள்ளேன். போலீஸ் தரப்பில் சில தவறான தகவல்கள் தரப்பட்டுள்ளன. இதனால் வில்லூர் எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர்., டி.எஸ்.பி., மற்றும் தனிபிரிவு போலீசார்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இரு சமூக மக்களும் சுமூகமாக வாழ வழிவகை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 

வில்லூரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

 

திருமங்கலம் அருகே வில்லூர் கிராமத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1ம் தேதி திருமங்கலம் அருகேயுள்ள வில்லூர் கிராமத்தில்  இருபிரிவினருக்கு இடையே நடைபெற்ற மோதலைத் தொடர்ந்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு மக்கள் கூட்டம் கூட்டமாக ஊரை காலி செய்தனர். குழந்தைகளுக்கு பால் கூட கிடைக்காத நிலை இயல்பு வாழ்க்கை எப்போது திரும்பும் என்று மக்கள் ஏக்கத்தில் உள்ளனர். இந்த சம்பவத்தில் மோதலுக்கு தொடர்பு இல்லாத அப்பாவி மக்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கப்பட்டுள்ளவரின் மனைவி பூரணம் கூறுகையில், எனது கணவர் லாரிக்கு சென்று வந்தார். கடந்த 2ம் தேதி இங்கு வந்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு இங்கு நடந்த சம்பவங்கள் எதுவுமே தெரியாது. காலையில் பஸ்ஸில் இருந்து இறங்கியவரை கைது செய்துவிட்டனர். எனக்கு 5 பெண்குழந்தைகள் உள்ளனர். என் கணவர் வருமானத்தில் தான் குடும்பம் நடத்த வேண்டியுள்ளது. அவரை கைது செய்ததால் எங்கள் நிலை மிகவும் மோசமாக உள்ளது. எங்களுக்கு காவல்துறை கருணை காட்டவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து அன்னலெட்சுமி கூறுகையில், எனது கணவர் முனியாண்டி பேப்பரே போடும் வேலை செய்கிறார். வழக்கமாக காலையில் பேப்பர் போட வந்தவரை போலீசார் கைது செய்து பேப்பர், சைக்கிள், செல் போன்றவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு தொடர்பு இல்லாத என் கணவரை கைது செய்தது தவறான செயலாகும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago