முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் மீண்டும் தாக்குதல் நடத்த தயங்கமாட்டோம்

வெள்ளிக்கிழமை, 6 மே 2011      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், மே 6 - பின்லேடனை கொல்ல நடந்த தாக்குதலை போல பாகிஸ்தானில் மீண்டும் ஒரு தாக்குதலை நடத்த அமெரிக்கா தயங்காது என்று அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பாகிஸ்தானில் கடந்த 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை பாகிஸ்தான் ராணுவத்திற்கே தெரியாமல் அமெரிக்க அதிரடிப்படை வீரர்கள் தாக்குதல் நடத்தி சுட்டுக்கொன்றனர். இதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது அனுமதியின்றி தன்னிச்சையாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.

ஆனால் பாகிஸ்தானில் பின்லேடனை கொல்ல நடந்த தாக்குதலை போன்ற ஒரு தாக்குதலை மீண்டும் நடத்த அமெரிக்கா தயங்காது என்று அமெரிக்க செய்தி துறை அமைச்சர் ஜாய் கேர்னி தெரிவித்தார்.

பின்லேடனை போன்ற அதிபயங்கர தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருந்தால் அவர்களை ஒழிக்க இது போன்ற தாக்குதலை மீண்டும் அமெரிக்கா  நடத்தும் என்றும் அவர் கூறினார்.

பின்லேடன் அமெரிக்க படைகளிடம் சரண் அடைந்திருந்தால் அவரை உயிரோடு பிடித்திருப்போம். ஆனால் அவர் அவ்வாறு  செய்யாததால் அவரை சுட்டுக்கொன்றதாகவும் அவர் தெரிவித்தார்.

பின்லேடனை சர்வதேச சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுத்தான் சுட்டுக்கொன்றதாகவும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்