முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்லாமிய தலைவருக்கு 90 ஆண்டு சிறை தண்டனை

செவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2013      உலகம்
Image Unavailable

 

டாக்கா, ஜூலை. 17 - வங்கதேசத்தில் நிகழ்ந்த போர்க்குற்ற வழக்கில் ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் 91 வது தலைவருக்கு வங்கதேச சர்வதேச குற்ற தீர்ப்பாயம் 90 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது.  கடந்த 1971 ம் ஆண்டு ஒருங்கிணைந்த பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் தனி நாடாக பிரிந்தது. முன்னதாக அங்கு சுதந்திர போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. ராணுவத்துடன் ஜமாத் இ இஸ்லாமி கட்சி இணைந்து போராட்டக்காரர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டது. இந்த போரின் போது ஏராளமானோர் உயிரிழந்தனர். 

இந்த போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச குற்ற தீர்ப்பாயம் கடந்த மூன்று ஆண்டுகளாக விசாரித்து அவ்வப்போது தீர்ப்பு வழங்கி வருகிறது. நீதிபதி ஏ.டி.எம். பஸல் கபீரை தலைவராக கொண்ட மூன்று உறுப்பினர்களை கொண்ட இந்த தீர்ப்பாயம் தனது 5 வது தீர்ப்பை வழங்கியது. அதில் ஜமாத் இ இஸ்லாமி கட்சி தலைவர் குலாம் அசம்(91) மீது கொலை மற்றும் துன்புறுத்தல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அவை அனைத்தும் உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு 90 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்