முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெட்ராஸ் கேப் படத்தை தடை செய்ய கோரி புகார்

வியாழக்கிழமை, 18 ஜூலை 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை.ஜூலை19  - மெட்ராஸ் கேப் என்ற பெயரில் புது இந்திப் படம் தயாராகியுள்ளது. கதாநாயகனாக ஜான் ஆபிரகாம் நடித்துள்ளார். இந்த படத்துக்கு முதலில் ஜப்னா என பெயர் வைத்து பிறகு மெட்ராஸ் கேப் என மாற்றினர். பெரும் பகுதி படப்பிடிப்பு இலங்கையில் நடந்துள்ளது. ஜான் ஆபிரகாம் இந்திய உளவுத்துறை அதிகாரியாக வருகிறார். ஒரு தீவில் நடக்கும் உள்நாட்டு யுத்தத்தை மையமாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளனர்.

விடுதலைப் புலிகளை அவதூறாக சித்தரிப்பது போன்று இப்படம் தயாராகியுள்ளதாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

நாம் தமிழர் கட்சியினர் அன்பு தென்னரசன், வக்கீல் அறிவுச் செல்வன், பழனிச்சாமி, தமிழர் பண்பாட்டு நடுவம் அமைப்பு செயலாளர் ராஜ்குமார் பழனிச்சாமி உள்ளிட்ட பலர் நேற்று கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

ஜான் ஆபிரகாம் நடித்த மெட்ராஸ் கேப் இந்தி படத்தில் ஈழத் தமிழர்களுக்காக போராடும் விடுதலைப்புலிகளை தீவிரவாதிகள் போல் சித்தரித்து உள்ளனர்.

தமிழர்களை கேடயமாக வைத்து அவர்கள் போரிட்டதாகவும் அவதூறு காட்சிகள் இடம் பெற்றுள்ளன. டேம் 999 படம் தமிழர்களுக்கு எதிரானது என்பதற்காக தடை செய்யப்பட்டது. விஸ்வரூபம் படத்திலும் சர்ச்சை காட்சிகள் நீக்கப்பட்டன.

விடுதலைப்புலிகள் மீது அவதூறு பரப்பும் மெட்ராஸ் கேப் படத்தை தடை செய்ய வேண்டும். படத்தை திரையிடுவதற்கு முன் தமிழ் அமைப்புகளுக்கு போட்டு காட்ட வேண்டும்.

இவ்வாறு மனுவில் குறிப்பிட்டு உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்