முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கு வங்க மாநிலத்தில் நாளை 5ம் கட்ட தேர்தல்

வெள்ளிக்கிழமை, 6 மே 2011      இந்தியா
Image Unavailable

 

கொல்கத்தா,மே.6 - மேற்கு வங்க மாநிலத்தில் 5 வது கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. நாளை சனிக்கிழமை வாக்குப் பதிவு நடைபெறும். மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு 6 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. இதில் ஏற்கனவே 4 கட்ட தேர்தல்கள் முடிந்து விட்டன. 5 வது கட்ட தேர்தல் 38 தொகுதிகளுக்கு நாளை நடக்கிறது. இந்த தேர்தலில் 193 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 74 லட்சம் பேர் வாக்களிக்கிறார்கள். இந்த தேர்தலையொட்டி காங்கிரஸ் மற்றும் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தனர். இந்த பிரச்சாரம் நேற்று மாலை 5 மணியுடன் முடிவுக்கு வந்தது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நாளை சனிக்கிழமை 38 தொகுதிகளில் 5 ம் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. 

இறுதிக் கட்ட தேர்தல் வரும் 10 ம் தேதி நடைபெறும். அன்றோடு இம்மாநிலத்தில் தேர்தல் முடிவடையும். வரும் 13 ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். மேற்கு வங்கத்தில் மட்டுமல்ல, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில முடிவுகளும் 13 ம் தேதியன்று மக்களுக்கு தெரியவரும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்