முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்து பெண்கள் மீதான பலாத்காரங்கள் பாக்.கில் அதிகரிப்பு

திங்கட்கிழமை, 22 ஜூலை 2013      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், ஜூலை. 22 - பாகிஸ்தானில் நடைபெறும் கற்பழிப்பு சம்பவங்களுக்கு இந்து பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக அமெரிக்காவின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சர்வதேச மத சுதந்திரம் என்ற தலைப்பில் அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு நிறுவனம் உலகளாவிய அளவில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்த அறிக்கையின் முடிவு அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது. ஷியா-சன்னி பிரிவினருக்கு இடையில் நடைபெற்ற 203 இன மோதல் சம்பவங்களில் 717 பேர் பலியாகியுள்ளனர். இவர்களில் 635 பேர் ஷியா பிரிவினர் என்பது தெரிய வந்துள்ளது. 

பலியாகும் இந்துப் பெண்கள் பாகிஸ்தானில் வசிக்கும் இந்துக்களை குறிவைத்து கடந்த 18 மாதங்களில் 16 தாக்குதல் நடைபெற்றுள்ளன. இந்த தாக்குதல்களில் 3 இந்துக்கள் பலியாகியுள்ளனர். 4 பேர் படுகாயமடைந்தனர். 7 பெண்கள் பலாத்காரம் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் 7 இந்து பெண்கள் பாகிஸ்தானியர்களால் கற்பழிக்கப்பட்டுள்ளனர் என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. 

சீக்கியர்களில் ஒருவரும் மதவெறி தாக்குதலில் பலியாகியுள்ளார். கிறித்துவப் பெண்கள் பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய மதப்பிரிவான கிறிஸ்தவர்கள் மீது 37 முறை தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதில் 11 பேர் பலியாகியுள்ளனர். 36 பேர் படுகாயமடைந்தனர். 5 கிறிஸ்தவ பெண்கள் பாகிஸ்தானியர்களால் கற்பழிக்கப்பட்டுள்ளனர் என அந்த ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்