காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் போக மாட்டேன் - ஜெகன்

Jagan 0

 

புதுடெல்லி, மே 6 - காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் போக மாட்டேன் என்று கடப்பா தொகுதியில்  காங்கிரஸ் கட்சியை எதிர்த்து போட்டியிடும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி திட்டவட்டமாக கூறியுள்ளார். ஆந்திர முன்னாள் முதல்வர் மறைந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி . இவர் தனது தந்தையின் மறைவுக்கு பிறகு ஆந்திர காங்கிரஸ் கட்சியில் தனக்கென்று ஒரு கோஷ்டியை அமைத்து  காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். இதை அடுத்து காங்கிரஸ் கட்சியிலிருந்து ஜெகன் மோகன் நீக்கப்பட்டார்.

அதன் பிறகு தனது தந்தையின் பெயரில் ஒய்.எஸ்.ஆர்.  காங்கிரஸ் என்று புதிய கட்சியை துவக்கினார்.

தனது கடப்பா தொகுதி எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்தார். காலியாக உள்ள அந்த கடப்பா தொகுதி எம்.பி. பதவிக்கு வருகிற 8 ம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி போட்டியிட்டுள்ளார்.

 இவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட்டுள்ளார்.

டெல்லியில் ஜெகன்மோகன் ரெட்டியிடம் தாங்கள் மீண்டும்  காங்கிரஸ் கட்சியில் சேருவீர்களா? என்று கேட்டதற்கு, தான் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு போவதில்லை என்று திட்டவட்டமாக கூறினார்.

காங்கிரஸ் கட்சி தன்னை இழிவுபடுத்தி விட்டது என்றும், தான் எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் அவர் கூறினார்.

கடப்பா தொகுதி இடைத்தேர்தலில் தான் வெற்றி பெறுவது உறுதி என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ