முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இயக்குனர் சீமான் ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்

புதன்கிழமை, 24 ஜூலை 2013      அரசியல்
Image Unavailable

ராமநாதபுரம்,ஜுலை.25 -  பிடிவாரண்டு உத்தரவு எதிரொலியாக இயக்குனர் சீமான ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜரானார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19-ந் தேதி தமிழ்திரையுலக தமிழின உணர்வுக்குழு சார்பில் இயக்குனர் மனோபாலா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் கலந்து கொண்ட இயக்குனர்கள் அமீர், சீமான் ஆகியேர் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கியூபிரிவு போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. இந்நிலையில் கடந்த 19-ந் தேதி இயக்குனர் சீமான் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி சதாசிவம் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நேற்று இயக்குனர் சீமான் ராமநாதபுரம் மாவட்ட கோர்ட்டில் நீதிபதி சதாசிவம் முன்னிலையில் ஆஜரானார். அவர்மீதான பிடிவாரண்டு உத்தரவை விலக்கி நீதிபதி உத்தரவிட்டார். இதன்பின்னர் இயக்குனர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:- ராமேசுவரத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக என்மீது தொடரப்பட்ட வழக்கு அரசியல் காரணத்திற்காக அப்பேதைய அரசு தொடர்ந்தது. இந்த வழக்கை சட்டப்படி சந்திப்பேன். தடைசெய்யப்பட்ட இயக்கத்திற்கு பணம் கொடுக்க கூடாது, ஆயுதங்கள் வழங்கக்கூடாது என்று மட்டுமே சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆதரித்து பேசுவது குற்றம் இல்லை என்று சுப்ரீம்கோர்ட்டு கூறியுள்ளது. இதேபோன்று புதுச்சேரியில் தொடரப்பட்ட வழக்கில் விடுதலை செய்து நீதிபதி புவனேஸ்வரி உத்தரவிட்டுள்ளார். தற்போது இதேபோன்று தமிழகத்தில் 10வழக்குகள் என்மீது போடப்பட்டுள்ளன. அனைத்து வழக்குகளையும் சட்டப்படி சந்திப்பேன். தமிழகத்தில் மக்களிடம் தமிழ் உணர்வை வளர்க்க அரசு கவனம் செலுத்த வேண்டும். மணல்கொள்ளையை தடுத்து விதிப்படி மணல் அள்ளுவதை உறுதி செய்யவேண்டும். தனியாரிடம் தண்ணீரையும், மணலையும் விற்பனை செய்யக்கூடாது. வருங்கால சந்ததியினர் தண்ணீர் பஞ்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எனவே, இதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். நெய்வேலி நிலக்கரிசுரங்க பங்குகளை அரசே வாங்கிகொள்ளும் என்று முதல்அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தது வரவேற்கத்தக்க முடிவு. இதனால் முதல்அமைச்சருக்கு ஏற்பட்ட புகழை கருணாநிதியால் சகித்துக்கொள்ள முடியவில்லை. இதனால், அதுபற்றிய முரணான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். மேலும், அன்னிய முதலீட்டை பாராளுமன்றத்தில் ஆதரித்துவிட்டு தற்போது எதிர்ப்பது நாடக விளையாட்டு. எந்தபிரச்சனையும் இல்லாததால் தற்போது கச்சத்தீவு பிரச்சனையை கருணாநிதி கையில் எடுத்துள்ளார். அதை தாரை வார்க்கும்போது தடுக்காமல்விட்டுவிட்டு இப்போது குரல் கொடுப்பது தமிழக மக்களை ஏமாற்றும் செயல். இலங்கை திரிகோணமலை பகுதியில் சீனா படைத்தளத்தினை அமைத்துள்ளது. அந்த பகுதியில் நவீன யுக்தியை பயன்படுத்தி கடல்வளத்தை அள்ளிகொண்டு வருகிறது. இதற்கு தமிழக மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிப்பது இடையூறாக உள்ளது. சீனாவின் நிர்ப்பந்தத்தால் இலங்கை அரசு தமிழக மீனவர்களை விரட்டி தாக்கி வருகிறது. இந்திய எல்லைப்பகுதியில் நமது இடத்தை கொஞ்சம் கொஞ்சமாக சீனா அபகரித்து வருகிறது. இதனை இந்தியா கண்டுகொள்ளாமல் உள்ளது. விரைவில் இதன் பாதிப்பு இந்திய மக்களை தாக்கும். அப்போதுதான் மத்திய அரசின் கவனக்குறைவு வெளிச்சத்துக்கு வரும். மத்திய அரசு கொண்டுவந்துள்ள உணவு பாதுகாப்பு மசோதாவால் மக்களுக்கு பயன்இல்லை. வறுமையை ஒழிக்காமல் அரிசி கொடுப்பது தவறு. தமிழகத்தில் கொலை குற்றங்களில் ்டுபடுபவர்களை கைது செய்து அவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்று தந்து அதன்விவரங்களை வெளிப்படுத்த வேண்டும். அப்போதுதான் குற்றவாளிகளுக்கு அச்சம் ஏற்படும். இவ்வாறு கூறினார். அப்போது, நாம்தமிழர் கட்சி மாவட்ட தலைவர் டோமினிக்ரவி, மாவட்;ட செயலாளர் கண்.இளங்கோ ஆகியோர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago