முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகை மஞ்சுளா உடல் தகனம்: நடிகர் - நடிகைகள் அஞ்சலி

புதன்கிழமை, 24 ஜூலை 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜூலை.25 - நடிகை மஞ்சுளா உடல் தகனம் நேற்று நடைபெற்றது. நடிகை மஞ்சுளா விஜயகுமார் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலை சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் காலமானார் நடிகர் விஜயகுமாரின் மனைவியும், நடிகையுமான மஞ்சுளா சென்னையை அடுத்த ஆலப்பாக்கத்தில்  அஷ்டலட்சுமி நகரில் வசித்து வந்தார். 

சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மதியம் அவர் மரணமடைந்தார். அவருக்கு வயது (59).

பலதிரை உலகினர் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபு, சூரியா, சத்தியராஜ், சரவணன், ஓய்.ஜி.மகேந்திரன், செந்தில், தியாகு. நடிகைகள் லட்சுமி, லதா, ஜோதிகா, சங்கவி, மீனா, சங்கீதா மற்றும் பலர் மலர் அஞ்சலி செலுத்தினர். நேற்று அவரது இறுதி சடங்கு நடைபெற்றது.

அவரது உடல் சென்னை அடுத்துள்ள காரப்பாக்கத்தில் உள்ள சுடுகாட்டில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் ஏராளமான நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்