முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி - தோனி கருத்து

வெள்ளிக்கிழமை, 6 மே 2011      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, மே. 6 - ஐ.பி.எல். 20 -க்கு 20 தொடரில் சென்னையில் நடைபெற்ற ராஜஸ்தா ன் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சிறப்பான பந்து வீச் சால் வெற்றி கிடைத்தது என்று இந்திய அணியின் கேப்டன் தோனி கருத்து தெரிவித்து இருக்கிறார். இது பற்றிய விபரம் வருமாறு - 

சென்னையில் நேற்று முன் தினம் நடந்த ஐ.பி.எல். போட்டியில் கேப் டன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கேப்ட ன் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி ன. 

பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. வெற்றி குறித்து சென்னை கேப்டன் தோனி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது - 

சென்னை அணி அதிகமான புள்ளிகளைப் பெற வேண்டும். ரன் ரேட்டில் முன்னிலையில் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் முன்னணி இடத்துக்கு வந்து இருக்கிறோம். இது மகிழ்ச்சி அளிக்கிறது. 

இந்த போட்டியில் வெற்றி பெற்றதற்கு பந்து வீச்சே முக்கிய காரணம். ராஜஸ்தான் வீரர்கள் ஒரு கட்டத்தில், பந்துகளை பவுண்டரிகளாக விர ட்டிய நேரத்தில், பந்து வீச்சாளர்கள் அதைக் கட்டுப்படுத்தினார்கள். 

ஆட்டத்தின் மத்தியில் ராஜஸ்தான் வீரர்கள் அதிக ரன்களைக் குவித் தார்கள். ஆனாலும் பந்து வீச்சாளர்கள் முக்கிய விக்கெட்டுகளை வீழ் த்தி விட்டனர். இதன் மூலம் எங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி தீர்ந்து விட்டது. 

ஹஸ்சி, ரெய்னா இருவரும் மிக நன்றாக ஆடி சேஸ் செய்தார்கள். ஒவ்வொரு ஓவரிலும் 7 முதல் 8 ரன்கள் வரை கூடுதலாக கொண்டு சென்றனர். எப்படியாவது இந்தப் போட்டியில் வெல்ல வேண்டும் என் று கருதினோம். அப்போது வெற்றி கிடைத்தது. 

தொடர்ந்து வெற்றி பெற்றதன் மூலம் கூடுதல் புள்ளிகளைப் பெற்று இருக்கிறோம். எனவே இனி ரன் ரேட்டை பற்றி கவலைப்பட அவசி யம் இருக்காது என கருதுகிறேன். இவ்வாறு தோனி கூறினார். 

சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தல் நடந்த இந்த போட்டியில் முத லில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெ ட் இழப்பிற்கு 147 ரன்னை எடுத்தது. டிராவிட் 66 ரன்னும், வாட்சன் 32 ரன்னும், டெய்லர் 20 ரன்னும் எடுத்தனர். மார்கெல் மற்றும் ஜகாதி இருவரும் தலா 2 விக்கெட் எடுத்தனர். 

அடுத்து பேட்டிங் செய்த சென்னை அணி 18.4 ஓவரில் 2 விக்கெட் இழ ப்புக்கு 149 ரன்னை எடுத்தது. இதனால் அந்த அணி 8 விக்கெட் வித்தி யாசத்தில் இந்த லீக்கில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago