முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்பெயின் நாட்டில் ரயில் கவிழ்ந்து 77 பேர் பலி

வியாழக்கிழமை, 25 ஜூலை 2013      உலகம்
Image Unavailable

 

சாண்டியாகோ, ஜூலை. 26 - ஸ்பெயின் நாட்டில் சாண்டியாகோ இசம்போல்டா என்ற இடத்தில் பயணிகள் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ரயில் தடம் புரண்டு கவிழ்ந்தது. அதில் பெட்டிகள் ஒன்றோடு ஒன்று மோதி நொறுங்கின. விபத்துக்குள்ளான ரயில் மாட்ரிட் நகரில் இருந்து பெர்ரோல் என்ற இடத்துக்கு சென்று கொண்டு இருந்தது. 

இந்த விபத்தில் 77 பேர் பலியானார்கள். 140 பேர் படுகாயமடைந்தனர். அங்கு மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரயில் தடம் புரண்டதற்கான காரணம் தெரியவில்லை. இது பற்றி விசாரணை நடந்து வருகிறது. கேலிசியான் என்ற இடத்தில் செயிண்ட் ஜேம்ஸ் என்பவரை கவுரவிக்கும் விழா நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக ஏராளமான பக்தர்கள் ரயிலில் சென்றனர். அவர்கள் விபத்தில் சிக்கி கொண்டனர். ரயில் ஒரு வளைவில் திரும்பும் போது அதிவேகமாக சென்றதால் தடம்புரண்டதாக கூறப்படுகிறது. ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜாய் விபத்து நடந்த இடத்துக்கு சென்று பார்வையிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்