முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டில் தான் விலையில்லா அரிசி வழங்கும் திட்டம்

வியாழக்கிழமை, 25 ஜூலை 2013      தமிழகம்
Image Unavailable

 

நாமக்கல் ஜூலை.26 - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் அவர்கள், மாண்புமிகு தமிழக தொழில்துறை அமைச்சர் திரு.பி.தங்கமணி ஆகியோர் நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் ஐயப்பன் கோயில் பின்புறம் காந்தி நகரில் உள்ள நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்க நியாயவிலைக்கடை, வகுரம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நியாயவிலைக்கடை, வசந்தபுரம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கு, நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க மண்ணெண்ணெய் வழங்கும் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது முதன்மைச் செயலர் உணவு பொருள் வழங்கல் துறை எம்.பி. நிர்மலா, உணவு பொருள் வழங்கல் துறை ஆணையாளர் ஸ்வரன்சிங்  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நிர்வாக இயக்குநர் எம். சந்திரசேகரன், மாவட்ட ஆட்சித்தலைவர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.  

ஆய்வின்போது நியாயவிலைக்கடைகளில் பொதுமக்களுக்கு சீரான முறையில் தரமான அரிசி வழங்கப்படுகிறதா, அரிசி, பருப்பு, பாமாயில் போன்ற அத்தியாவசியப்பொருட்கள் இருப்பில் உள்ளதா என்பதையும், ஆய்வு செய்ததோடு அங்குள்ள பொதுமக்களிடம் நியாயவிலைக்கடைகளில் தரமான அரிசி நல்ல முறையில் வழங்கப்படுகிறதா என்பதை  உணவுத்துறை அமைச்சர் கேட்டறிந்தார். மேலும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கிடங்கில் ஆய்வு செய்தபோது அங்கு அரிசி, கோதுமை சர்க்கரை, துவரம்பருப்பு, உளுந்தம்பருப்பு, பாமாயில் ஆகியவை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா என்பதையும், கிடங்கிலிருந்து நியாயவிலைக்கடைகளுக்கு லாரிகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பும் முறை குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். கிடங்கிலிருந்து நியாயவிலைக்கடைகளுக்கு கொண்டு செல்லும் அரிசி மூட்டைகளின் எடையும் சரிபார்க்கப்பட்டது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுவிநியோகத் திட்ட செயல்பாடுகள் குறித்த ஆய்வுகூட்டத்தில்  தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் பேசியதாவது: 

 தமிழக முதலமைச்சர் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் 1 கோடி 84 இலட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி வழங்கும் ஒப்பற்ற திட்டத்தை வழங்கி வருகிறார். மாதம் ஒன்றுக்கு 3.16 இலட்சம் மெ.டன் தரமான அரிசி விலையில்லாமல் வழங்கப்படுகிறது. மேலும் 1 கிலோ துவரம்பருப்பு ரூ.30க்கும் 1 கிலோ உளுந்தம்பருப்பு ரூ.30க்கும், பாமாயில் 1 லிட்டர் ரூ.25-க்கும், மானிய விலையில் வழங்கப்படுகிறது. இதற்காக ரூ.4,900 கோடி மானியமாக வழங்கியுள்ளார்கள். இதனடிப்படையில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ஒன்றுக்கு ரூ.291 அரசு மானியமாக வழங்கப்படுகிறது. வெளிச்சந்தையில் அரிசி விலையை கட்டுப்படுத்த ஒரு கிலோ அரிசி ரூ.20 -க்கு வழங்கும் திட்டத்தின் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் 279 கூட்டுறவு மற்றும் அமுதம் நியாயவிலை அங்காடிகளில் இன்றுவரை 30,600 குவிண்டால் தரமான அரிசி விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழக மக்களுக்கு முழுமையான உணவு பாதுகாப்பை அம்மா  அளித்து வருகிறார். அதன் காரணமாக மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு விளக்கு அளிக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார்கள். 

மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்கி வந்த மண்ணெண்ணெய் ஒதுக்கீடு தற்போது 29,060 கிலோ லிட்டராக குறைந்துள்ளது.  தமிழக முதல்வர் தமிழகத்தின் முழுத் தேவையான 65,140 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார்.  தமிழக முதலமைச்சர் புதுடெல்லியில் நடைபெற்ற முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும்போது அத்தியாவசியப் பொருட்கள் கடத்தப்படுவது இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். தமிழகத்தில் எடுத்த நடவடிக்கையின் காரணமாக உணவு பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கையின் மூலம் 19,143 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 11,655 நபர்கள் கைது செய்யப்பட்டு அதில் 418 நபர்கள் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 

நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 702 முழுநேர நியாயவிலைக்கடைகள் 197 பகுதி நேர நியாயவிலைக்கடைகள் மூலம் மாதந்தோறும் 4.98,847 குடும்ப அட்டைதாரர்களுக்கு சராசரியாக 5800 மெ.டன் விலையில்லா அரிசி வழங்கப்பட்டுள்ளது. நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்குகளிலிருந்து அனுப்ப்பபடும் அரிசி தரம் தரக்கட்டுப்பாடு அலுவலர்களால் தீவர பரிசோதனைக்கு பின்னரே அங்காடிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் தரமற்ற அரிசியை கிடங்கிலிருந்து அனுப்பக் கூடாது. விலையில்லா அரிசி சரியான எடையில் பொதுமக்களுக்கு வழங்கிட வேண்டும் எனவும், பொதுவிநியோகத்திட்டத்தை செயல்படுத்துவதில் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ்டுபடவேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். 

இந்நிகழ்ச்சியில் உணவு பொருள் கடத்தல் குற்றப்புலனாய்வுத்துறை, காவல் கண்காணிப்பாளர் ஆசியம்மாள் , சட்டமன்ற உறுப்பினர்கள் கே.பி.பி.பாஸ்கர்,உ.தனியரசு, சாந்தி, மாவட்ட வருவாய் அலுவலர் கோ.செங்குட்டுவன், இணைப்பதிவாளர் கூட்டுறவு சங்கம் முத்துகுமாரசாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் சுந்தர்ராஜ் உட்பட அரசுத்துறை அலுவலர்கள், கூட்டுறவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago