முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடிக்கு விசா எதிர்ப்பு: அமெரிக்க இந்தியர்கள் ஆதரவு

வியாழக்கிழமை, 25 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

வாஷிங்டன், ஜூலை. 26 - குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு விசா வழங்க கூடாது என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுதியுள்ள கடிதத்தை மதசார்பற்ற இந்திய வம்சாவளி அமெரிக்க குழு நியாயப்படுத்தி உள்ளது. இதனிடையே ஒபாமாவுக்கு இந்திய எம்.பி.க்கள் கடிதம் எழுதியிருப்பது அவர்களது உள்நாட்டு விவகாரம் என்றும் இது சிந்திக்க கூடியதல்ல என்றும் அமெரிக்காவில் இருந்து வெளிவரும் வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு விசா வழங்க கூடாது என 65 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிபர் ஒபாமாவுக்கு கடிதம் எழுதி இருப்பது சுலபமான காரியம் அல்ல என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இது குறித்து இமான் நெட் தலைவர் ஷேக் உபைத் கூறுகையில், மனித உரிமை என்பது அனைத்து நாடுகளுக்கும் பொதுவானது. எனவே மோடி மீதான இப்போதைய கொள்கையை ஒபாமா மாற்றக் கூடாது. குஜராத் கலவரம் நிகழ்ந்த 10 ஆண்டுகள் கடந்து விட்டது. கலவரத்துக்கு காரணமானவர், பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட உள்ளதாக கூறப்படும் நிலையிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என்றார். 

கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு மோடிக்கு எதிராக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரத்தில் இந்த குழு முன்னணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. மனித படுகொலைக்கு எதிரான கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய நாடாளுமன்ற இரு அவைகளின் பல்வேறு கட்சி உறுப்பினர்கள் முன் எப்போதும் இல்லாத வகையில் தங்கள் நாட்டில் நிகழ்ந்த மனித உரிமை மீறல் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு கடிதம் எழுதி உள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்